முகைதீன் பெரிய ஜும்மாப் பள்ளிவாயல் தலைவர் கே.எல் .பரீட் மோசடிக் காரர் நீதிமன்றம் தீர்ப்பு வக்பு சபை சட்டதிட்டங்களுக்கு அமைவாக பள்ளிவாயல் தலைவராக இருப்பது சட்ட விரோதம் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் சம்மேளனத்திற்கு திறந்த வேண்டு கோள்

13330271_995199473910015_1344658251_nபுதிய காத்தான்குடி பெரிய ஜும்மாப் பள்ளிவாயல்  தலைவர் கலந்தர்லெப்பை பரீட்  மட்டகளப்பு நீதி மன்றத்தால்  குற்றவாளியாக  தீர்ப்பு வழங்கப்பட்டு  தண்டப்பணம் செலுத்தி வரும் ஒருவர் என்பது தெரியவந்துள்ளது  வக்புசபை சட்டதிட்டங்களுக்கு  அமைவாக பள்ளிவாயல்  நிருவாகபொறுப்பில் இருப்பது சட்டவிரோதமாகும்.

புதிய காத்தான்குடி பகுதியில் வசித்து வரும் இவர் அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின்  தீவிர ஆதரவாளராக செயற்பட்டு வருகிறார்  கடந்த  மாகாணசபையில் உறுப்பினருக்கான  வெற்றிடம்  ஏற்பட்டதை தொடர்ந்து   நடந்து முடிந்த மாகாண சபைத் தேர்தலின் போது உதிரியாக  அமைச்சர் சார்பில் போடப்பட்ட பெயர்பட்டியலில் போட்டியாளராக  சேர்க்கப் பட்டிருந்தார் மக்கள் ஹிஸ்புள்ளஹ்வுக்கு  வழங்கிய மக்கள் ஆணையை  பொறுப்பு வாய்ந்த பதவி ஒன்றினை அமானிதத்தை உதாசீனம் செய்த ஹிஸ்புல்லாஹ்  எதுவித தகுதிகளும் இல்லாத நிலையில்   சீட்டிழுப்பில் மாகாணசபை உறுப்பினராக  தெரிவுசெய்தார்.

ஹிஸ்புல்லாஹ்வின் இந்தநடவடிக்கை வாக்களித்த மக்களை சில்லறைத்தனமாக சிரிக்கவைத்தது பொதுமக்களும் தங்கள் வாக்களித்தமையை   நினைத்து வெட்கப்பட்டுக் கொண்டனர் .

இதன் காரணமாக மாகாணசபையை பயன்படுத்தி காத்தான்குடி ஆரயம்பதி பகுதிகளில் உள்ள இளைஞ்சர்களுக்கு வங்கி மற்றும் நகரசபை போன்றவற்றில் பெரும் தொகை பணத்திற்காக  மோசடியாக வேலை வாய்ப்புக்களை  வழங்கினார் மேலும் பல  தமிழ் முஸ்லிம்  இளைஞ்சர்களிடம் வேலை வாய்ப்பை பெற்றுத்தருவதாக பெரும்தொகை பணத்தைப்மோசடியாகப் பெற்று ஏமாற்றியும் வந்தார் இதனால் ஆத்திரம் அடைந்த தமிழ் முஸ்லிம் இளைஞ்சர்கள்  காத்தான்குடி பிரதேசத்தில்  இயங்கி வரும் சமரசபையில்    தங்களை ஏமாற்றி பணம் வாங்கியதாக வழக் ஒன்றினை கூட்டாக தொடுத்திருந்த போதிலும் அங்கு தீர்ப்பு வழங்குவதில் பலசிரமங்கள் ஏற்பட்டு இருந்தன வழக்காலர்களை மறைமுகமாக அச்சுறுத்தியும் வந்ததால் இவ்வழக்கு மட்டகளப்பு நீதி மன்றத்திற்கு மாற்றப்பட்டது பின்னர் இதை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட நீதி பதி விசாரணையை மேற்கொண்டார்  இவரது மோசடி நீதி மன்றத்தில் நிருபனமானது .

இதனைத் தொடர்ந்து நீதி மன்றத்தில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு  ஒவ்வொரு மாதமும் ஏமாற்றிப் பெறப்பட்ட பணத்தினை  திருப்பி செலுத்துமாறு தீர்ப்பு வழங்கப் பட்டுள்ளது இத் தீர்ப்புக்கு அமைவாக  பணத்தை செலுத்தி வருகிறார் .

இவ்வாறான மோசடியான வழிகளில் பணம் சம்பாதி த்து குற்றவாளியாக காணப்படும் ஒரு வரை சம்மேளனத்தின்  புதிய தலைவர் முன்னாள் ஒரு ஜும்மாப்பள்ளிவாயலின் தலைவராக  பள்ளிவாயல் நிருவாகத்லுள்ள  இவரது  ஆதரவாளர்களின் பெரும் பான்மை வாக்குகளால் தலைவராக  தெரிவு செய்தமை கண்டிக்கத்தக்கதாகும் .

வக்பு சபை சட்டதிட்டங்களுக்கு அமைவாக நீதி மன்றத்தில் குற்றவாளியாக காணப் படும் ஒருவர் பள்ளிவாயல் பொறுப்புக்களில் இருக்கமுடியாது என்பதாகும் எனவே உடனடியாக பள்ளிவாயல் நிருவாகிகள் மற்றும் சம்மேளனமும்   இணைந்து தலைவர் பதவியில் இருந்து இடை நிறுத்துவதற்கு துரிதமான நடவடிக்கைகளில் ஈடு படுமாறு பிரதேச மக்கள் சம்மேளனத்தையும்  நிருவாகத்தினரையும் கேட்டுக் கொள்கின்றனர் .

 

 

This entry was posted in Uncategorized. Bookmark the permalink.

1 Response to முகைதீன் பெரிய ஜும்மாப் பள்ளிவாயல் தலைவர் கே.எல் .பரீட் மோசடிக் காரர் நீதிமன்றம் தீர்ப்பு வக்பு சபை சட்டதிட்டங்களுக்கு அமைவாக பள்ளிவாயல் தலைவராக இருப்பது சட்ட விரோதம் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் சம்மேளனத்திற்கு திறந்த வேண்டு கோள்

  1. முஹம்மத் அஷ்பாக் says:

    அது மட்டுமல்ல
    கர்பலா கிராமத்தில் நாங்கள் காசு கொடுத்து வாங்கிய காணிகளை இவரும் அமீர் அலி என்பவரும் சேர்ந்து அடைத்து வைத்துக் கொண்டு அவர்களின் காணியென்று கள்ள உறுதி முடித்துக் காட்டுகிறார்கள்

Leave a comment