தொல்லை கொடுத்த ஊடகவியலாரும் அவரது உதவியாளரும் பொலிசாரினால் விசாரனைகுட்படுதப் பட்ட போது தவறான கண்ணோட்டத்தில் விசாரணையை திருப்பி திருமண மாகாத இளம்பெண்ணை அச்சுறுத்தினார் உதவியாளர்.

எஸ் .எம் .பஹ்ஜான்

14192131_984155611695922_8568469525962619383_nகாத்தான்குடி பிரதான வீதியில் இடம்பெற்ற மின்சாரத்  தாக்குதலக்கு இலக்காகிய நிலையில் படுகாயமடைந்த   சிறுவன்  வைத்திய சாலையில்   அனுமதிக்கப்பட்டிருந்த . சம்பவம்   தொடர்பில் இப்  பிரதேசத்தில்  இருந்து வெளிவரும்  வார உரைகல் பத்திரிகையின்  பிரதம  ஆசிரியர்  புவி ரஹ்மத்துல்லாஹ் அவர்களினால் முகப்புத்தகப் பக்கத்தில்   வெளியிடப்பட்ட  செய்தியில் திட்டமிட்ட  அடிப்படையில்  சிறுவன் கடமையாற்றும்  வர்த்தக  நிலையத்தின்   கணக்காளரினால் நடத்தப்பட்ட  அசிட்  வீச்சுத் தாக்குதலாகும் என தனது  சந்தேகத்தை  தெரிவித்திருந்தார்.

பின்னர் இச்செய்தி  வைரலாக பரவியது இதனை  ஆதாரமாகக் கொண்டு சமூக வலைதளங்களும் நீதி கோரி  செய்திகளை  வெளியிட்டிருந்தன.

இதனையும் அடிப்படியாகக் கொண்டு பொலிசாரும் விசாரணைகளை ஆரம்பித்தனர் .இச்செய்தி  தொடர்பில் வேறு  ஒரு இணையத்தளத்தில்  வெளியிடப்பட்ட   காணொளி ஒன்றில்  சிறுவன்  மின்சாரதாகுதளுக்கு இலக்காகி விழுந்து  கிடக்கும்  காட்சிகள் பிரசுரிக்கப் பட்டிருந்தன .

இருந்த போதிலும் தொடராக  சந்தேகத்தை  உறுதிப் படுத்தும் நோக்கில்  வார உரைகல்  பத்தரிகைஆசிரியரின்   உதவியாளர் ஒருவரினால்  ஆய்வுக் கட்டுரை என்ற  பெயரில் கற்பனை கலந்த பொய்களை எழுதி தனது  முகப்புத்தகப்  பக்கத்தில்  வெளியிட்டிருந்தார்  .

இச் செய்தியின் பின்னர்  பிரதேச  அரசியல்வாதிகள்  கமராவும்  கையுமாக வைத்திய சாலையை  நோக்கி படையடுத்திருந்தையும்  அவர்களது முகப் புத்தகப் பக்கங்களில் சிறுவனுடன் இணைந்து  எடுக்கப் பட்ட  புகைப் படங்களும் பிரசுரமாகி இருந்தன .

வைத்திய சாலையில்  அனுமதிக்கப் பட்டிருந்த சிறுவன்  படிப்படியாக  குணம் அடைந்து வரும் நிலையில் மட்டக்களப்பு போதனா  வைத்தியசாலையின் மருத்துவ அறிக்கை வெளியானது .

இவ்வறிக்கையில் சிறுவன் மின்சாரதாகுதளுக்கு இலக்கானதன் காரணமாக இக்காயம்  ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப் பட்டிருப்பதைத் தொடர்ந்து இச்சம்பவம்  உறுதி செய்யப்பட்டது.

தொடர்ந்தும் சிறுவனின் வீட்டிற்கு சென்று  அவரது சகோதரி  மற்றும் தாயை தொந்தரவு செய்து வருவதாக ரஜானின் வீட்டாரினால் காத்தான்குடி போலிஸ் நிலையத்தில்  வார உரைகல் பத்திரிக்கையின்  பிரதம  ஆசிரியர் மற்றும் அவரது  உதவியாளர் இருவருக்கும்  எதிராக  முறைப் பாடு செய்யப்பட்டிருந்தது.

இதனை மூன்று தினங்களுக்கு முன்னர் விசாரணைக்கு எடுத்துக் கொண்ட  போலீசார் இருசாரையும் விசாரித்தனர். இது  குறித்து சிறுவனின் சகோதரியிடம்  விசாரணையை மேற்கொண்ட  போது  பொலிசாரிடம் தெரிவித்ததாவது .

இச் சம்பவத்தின் பின்னர் எமது வீட்டிற்கு வந்த நியாஸ் என்பவர் என்னுடன்  தனிமையாக ஒரு மணித்தியாலங்களுக்கு மேலாக பேசிக் கொண்டிருந்தார் . பின்னர் எங்களுக்கு  உதவித்தொகையாக  ஐயைரம்  ரூபா பண உதவிகளையும் செய்து விட்டுச் சென்றார் என தெரிவித்தார் .

இவ்விசாரணைகளின் போது  பிரதம ஆசிரியறினால்  உதவித்தொகையாக  வழங்கப் பட்ட  ஐயாயிரம்  ரூபாயையும் திருபித்தரவேண்டும்  என அந்த ஏழை குடும்பத்தாரை மிரட்டியதை தொடர்ந்து செய்வதறியாமல்  அங்கு  சமூகம் அளித்திருந்த வர்த்தக நிலைய உரிமையாளரிடம் கைமாற்றாகப்  பெற்று  இவர்களால்  வழங்கப் பட்ட  உதவித்தொகை  சிறுவனின் குடும்பத்தால்   பொலிசாரிடம்  வழங்கப்பட்டு  திரும்பிச் செலுத்தப்பட்டது.

போலீசில் இடம் பெற்ற சம்பவம் தொடர்பில் உதவியாளரின் முகப் புத்தகப் பக்கத்தில் வெளியிடப் பட்டிருந்த இடுகையில் உண்மைகள் மறைக்கப் பட்டு வெளியிடப் பட்டிருந்தன .

இதன் பின்னணியில்  பத்திரிகையாளர்களுக்கு  சார்பாக ஒரு அரசியல் வாதியின் தலையீடு  போலிஸ் நிலையத்தில் செல்வாக்கு  செல்லுத்தி  இருந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார் .

 

 

 

 

Advertisements
This entry was posted in Kattankudy. Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s