காத்தான்குடி நகரசபைச் செயலாளர் பல்வேறு ஊழளில் சிக்கினார் இடம் மாற்றும் முயற்ச்சியில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தவிசாளர் அப்துரஹ்மான்

vf-1024x768காத்தான்குடி நகரசபையில்  இடம் பெற்று வரும்  ஊழல்கள்  தொடர்பில்  நல்லாட்சிக்கான  தேசிய முன்னனி  தொடரான  அவதானத்தை செலுத்தி வருகிறது .நகரசபையின் ஆட்சிக்காலத்தின் போது.  இடம் பெற்ற ஊழல்கள் தொடர்பில்  தொடரான  செய்திகளை    ஊடகங்களிலும்  தேர்தல்  பிரச்சாரங்களின்  போதும்   வெளியிட்டு  மக்கள் மயப் படுத்திவந்தது . பல்வேறு  உறுதியான ஆதாரங்களை  முன் வைத்த போதிலும்  அவைகள்  அரசியல்  அதிகாரம் காரணமாக  முன்கொண்டு செல்லமுடியாத நிலைக்கு  தள்ளப்பட்டிருந்தது.

ஆட்சிக் காலம் முடிவடைந்ததிளிருந்து சபையின்  அதிகாரம் சட்ட பூர்வமாக  அதன் செயலாளரிடம்  குவிக்கப் பட்டிருகிறது  .இதனை  சாதகமாகப்  பயன் படுத்திக் கொண்ட  செயலாளர் பல  இலட்சம்  ரூபாய்  ஊழலில்  ஈடுபட்டுள்ளார்.

முன்னாள் நகரசபை  தவிசாளர் மேற்கொண்ட  அனைத்து ஊழல்களிலும்  பங்கெடுத்துக் கொண்ட  இவர் அதனைச் சாதகமாகப்  பயன் படுத்தி  தொடராக  ஊழலில்  ஈடுபட்டுள்ளார்  .

கடந்த  ஆட்சிக் காலத்தில்  நகரசபையுடன்   இணைந்து  ஊழலில்  ஈடுபட்ட  மாகணசபை உறுப்பினர் சிப்லி  பாரூக் பின்னரும்  நகரசபையில்    இடம் பெற்ற அனைத்து அபிவிருத்தித் திட்டங்களிலும்  கொந்தாராதைப் பெற்றுக் கொண்டு  கணிசமான (கொமிசன் )  வழங்கி யுள்ளதாகவும்  தெரிய வருகிறது .

பலமுறை செயலாளரை  இடம் மாற்றுவதற்கான  முயற்சிகளை மேற்கொண்ட போதிலும் முதலமைச்சருடன்  தனக்குள்ள  அதிகாரத்தினைப் பயன் படுத்தி  சிப்லிபாரூக்தடுத்து வந்துள்ளார்.

இச் செயலாளர்  இடமாற்றப் படும் போது  நகரசபையில் இவர் மேற்கொண்டு வரும்  அனைத்து  கொந்தராத்து வேலைகளுக்கும்  தடையாக அமையக் கூடும் என்பதனாலேயே இவ்வாறு செயற்பட்டு வந்ததாக முன்னாள் நகரசபை உறுப்பினர் ஒருவர்  உறுதிபடத்  தெரிவித்தார் .

நகரசபையின் மூலம் வழங்கப்பட்ட   கொந்தாரத்துக்களில் சிப்லி  பாரூக்கிடம்  பெறப்பட்ட   பாரிய தொகை  கையூடின் மூலம் பல கோடிரூபாய்    பெறுமதியான  இரண்டு சாரயத் தவறணை மற்றும் மட்டகளப்பு நகரப் பகுதியில்  கடைத் தொகுதி  என்பன இருமாதங்களுக்குள்  கைமாறப் பட்டுள்ளன .மட்டகளப்பு  பிரதேசத்தில் இவரால்  பெரும் தொகை பணத்தில் கொள்வனவு செய்யப்பட்ட காணியை  துப்பரவு செய்யும்  பணிகளுக்காக    நகரசபையின்  வாகனங்களை பயன்  படுத்தி உள்ளதாகவும்  இது அனைத்தும் மாகாணசபை  உறுப்பினர் அறிந்திருந்தார்  என்றும்  நம்பகமான  வட்டாரங்களில் இருந்து  தெரிய வருகிறது.

Advertisements
This entry was posted in Uncategorized. Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s