புதிய காத்தான்குடி முகைதீன் பெரிய ஜும்மா பள்ளிவாயல் கட்டிட வேலைகளில் பாரிய நிதி மோசடி எச்சரித்தார் அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்

mlamபுதிய காத்தான்குடி கடக்கரை வீதியில் அமைக்கப் பட்டுவரும் பெரிய ஜும்மா பள்ளிவாயல் கட்டிட வேலைகளுக்கு என  முஸ்லிம் விவகார அமைச்சினால் வழங்கப் பட்ட   8700000 இலட்சம் ரூபாய் நிதியினை கையாண்ட   அமைச்சரின் விசுவாசி ஒருவரினால் நிதி மோசடி  இடம் பெற்றுள்ளதாக  முன்னாள் இந்நிதியை கையாள்வதற்கு பொறுப்பாக நியமிக்கப் பட்ட குழுவில்  இருந்த ஒருவர் எமது இணையதளத்திற்கு தெரிவித்தார் .

இப் பள்ளிவாயலின் கட்டிட வேலைகளுக்கு என அமைச்சரினால்  நியமிக்கப் பட்ட ரஊப் என்பவரே  கட்டிடப் பொருட்களை வாங்குவதற்காக  நியமிக்கப் பட்டிருந்தார் இவரால் கொள்முதல் செய்யப்பட்டு வழங்கப் படும் பற்றுச் சீட்டுகளுக்கான நிதியினை  பள்ளிவாயல் குழு வழங்கும்  இவரால் கொள்முதல் செய்யப் பட்டதாக வழங்கப் பட்ட  பற்றுச் சீட்டு  ஒன்றில்  குறிப்பிட்ட பொருட்களின்  சந்தை விலையை விட  அதிக விலைக்கு வாங்கியதாக பற்றிச் சீட்டை நிதியை கையாளும் குழுவிடம்   வழங்கி இருந்தார் பள்ளிவாயல்   குழுவில் ஒருவரான   சகோதரர் பதகுள் கரீம் இது மோசடியானது என நிதிக் குழு கூட்டத்தில் சுற்றிக் காட்டி குறிப்பிட்ட பற்றுச் சீட்டில் வாங்கப் பட்டுள்ள பொருட்கள் சந்தையில் குறைவான விலையில் இருப்பதாக தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து அமைச்சரினால் நியமிக்கப் பட்ட ரஊப் என்பவர் இச் செய்தியை அறிந்ததும் இரண்டு மாதங்களாக பள்ளிவாயல் வேலைகளை தாமதப் படுத்திவந்தார்  இதன் போது  ஹிஸ்புல்லாஹ்வின் நெருங்கி ஆதரவாளரான அரபாத் என்பவரை தொடர்பு கொண்ட அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் என்ன பள்ளிவாயல் நிருவாகம் கணக்கு கேட்க்கிறார்களாமே என்று மிரட்டயுள்ளார்  இச்சம்வத்தை  அரபாத் பள்ளிவாயல் நிருவாகிகளிடம் தெரிவித்துள்ளார் .

இப்பளிவாயல் கட்டிட வேலைகளுக்கு பொறுப்பாக நியமிக்கப் பட்ட  ரஊப்எதுவித கொடுப்பனவுகளும் பெறாமலே இக்கொள்வனவு வேலைகளில் ஈடுபடுவார் என பள்ளிவாயல் நிருவகிகளிடம் தெரிவித்திருந்த போதும் மாதம் ஒன்றுக்கு இருபதாயிரம் ரூபாய் சம்பளமாக பெற்றுள்ளதாக கணக்கு அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது

 

Advertisements
This entry was posted in Uncategorized. Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s