காத்தான்குடியை தளமாகக் கொண்டு இயங்கி வரும் நல்லாட்சிக்கானதேசிய முன்னணி குறித்து அண்மைக் காலமாக மேல் எழுந்து வரும் விமர்சனம் தொடர்பில் எமது செய்தியாளரின் பார்வையில

pmgg-01-300x172நல்லாட்சிக்கான தேசிய முன்னணியானது பத்துவருடங்களுக்கு மேலாகா தனது சமூக அரசியல்  பணிகளை காத்தான்குடியில் ஆரம்பித்து நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் விஸ்தரித்துவருகிறது.

இதன் கொள்கையின்  அடிப்படையில் இதுவரை சமூகநலன் சார்ந்த விட்டுக்  கொடுப்புக்களோடு ஏனைய அரசியல் கட்சிகளோடு கூட்டினைந்தும் செயலாற்றி வருகிறது இதன் வளர்ச்சி, நம்பகத்தன்மை மக்கள் மத்தியில்  மேல் எழுந்துள்ளதை அவதானிக்க முடியும்

மிக அண்மைக் காலமாக இதன் சமூகப் பணிகளை முன்னெடுப்பதில் பல்வேறான சிரமங்களை அனுபவித்து வருவதையும்  எதுவித அரசியல் கட்சிகளின் நிதி ஒதுக்குதல் மற்றும் அரசநிதி என்பன வற்றை சார்ந்திராதும்  முதன்மைப் படுத்தாமலும்    முழுக்க முழுக்க இயக்க உறுப்பினர்களின் நிதியில் சமூக பணிகளை முன்னெடுத்து வருவதால் இவ்வாறான  நிலை தோன்றி இருப்பதை காணமுடியும் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகளின் நெருக்கு வாரங்களும் காரணமாக இருக்கலாம்

இருந்த போதிலும் குறிப்பிடத்தக்க அளவு சமூகப் பணிகள் இடம்பெற்று வருவதை மறுக்க முடியாது இதன் ஆரம்பக்கட்ட வளர்ச்சியில் இணைந்து  செயலாற்றிய   சிலராலும் மூன்றாம் தர   எழுத்தாளராலும் பல்வேறு குற்றச்சாட்டுக்களையும்  முன்வைத்து விமர்சனங்கள் எழுதப் பட்டு வருவதை காணக் கூடியதாக உள்ளது .

இவ்விமர்சகர்களும் கட்சியின் கொள்கைகளும்

சமூகப் பணிகளை முன்னெடுத்து வரும் நல்லாட்சிக் காண தேசிய முன்னனி எதுவ்வித சுயநலம் சாராத பணிகளையே மேற்கொண்டு வருகின்றனர் அதை ஒரு இபாதத்தாகவும் கருதியே தங்களது பணிகளை மேற்கொள்வதாக தோழர்களுக்கும் சமூகத்திற்கும் பொதுவாக தெரிவித்து வருகின்றனர்

உலக ஆதாயத்தை எதிர்பார்த்து இதன் பணிகளில் இடுபடுவோர்  நிச்சயமாக இதன் பங்காளிகளாக இருப்பது கடினமான ஒன்றாகும் இதன் விளைவே சிறுபிள்ளைதனமாக சில்லறை விமர்சனங்களை ஊடகங்களுக்கும் முகப் புத்தப்பக்கங்களிலும் வெளியிட்டு தங்கள் தங்கள் மூன்றாம் தர  எழுத்தாற்றலை வெளிக்கொனர்வதை   அவதானிக்க முடிகிறது.

நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் கொள்கைகளை விளங்கிக் கொள்வதில் உள்ள குழப்பநிலை அல்லது தங்கள் சார்ந்துள்ள கட்சிகளின் திருப்திப் படுத்தல், மனித பலகீனம்  என்பன போன்ற காரணங்களே இவ் விமர்சனத்தின்  பின்னணியில் காணப்படுகிறது.

அண்மைக் காலமாக நல்லாட்சிக் காண தேசிய முன்னணி ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து சில அபிவிருத்தித் திட்டங்களை முன் எடுத்து  வருகிறது இதன் கொத்தணி அமைப்பாளராக உள்ள முஸ்தபா என்பவருடன் செயற்பட்டுவருவதை செய்தித்தளங்கள் மூலம் நாம் அறிந்திருந்தோம் காத்தான்குடியில் உள்ள சில சில்லறைக்   கூட்டம் ஐக்கிய தேசியக் கட்சியின் கொத்தணி குழு உறுப்பினர்கள் என அழைத்துக் கொண்டு முஸ்தபாவை அச்சுறுத்தி நல்லாட்சிக் காண தேசிய முன்னணிக்கு எதிராக பொய்யான அறிக்கைகளை  வெளியிட்டு  வருகின்றது இதன் பின்னணியில் அமைச்சர் அமீரலியின் கைகள் இருப்பதாகவும் தெரிகிறது.

நல்லாட்சிக்காண   தேசிய முன்னணிக்கும் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் உள்ளதொடர்பு

மிக நீண்டகாலமாக ஐக்கிய தேசியக் கட்சியின் உயர்மட்டக் குழுவுடன் பல்வேறு பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுவந்துள்ளது  அதன் முக்கிய உறுப்பினர்களோடும் தொடர்பை பேணி வருகிறது இம்தியாஸ் பாக்கீர்மக்கார் உட்பட பிரதமர் ரணில் விக்கிரம சிங்க வரையிலும் வலுவான தொடர்புகள் உள்ளன இந் நிலையில் கத்தான்குடியிலுள்ள இந்த மூன்றாம் தர எழுத்தாளர்களின் கீழ் இயங்கும் அலியார் காக்காவின் கொத்தணிக் குழுவால் என்னதான் சாதிக்க முடியும் இதன் பின்னியில் இருந்து  விமர்சனங்கள் எழுவதுதான் வேடிக்கையாகும்  ஓரளவு  சிந்திக்க முடியுமான மனிதர்களால் எழுப்பப் படும்  இவ்விமர்சனங்கள் கலியாணவீட்டில் மாப்பிள்ளை தரப்பார் மேற்கொள்ளும் விமர்சனம் போல் இருப்பதுதான் வேடிக்கையாகும்  வளர்ந்து வரும் ஒரு சமூகம் சார்ந்த தூய்மையான அரசியல் கொள்கையை   விமர்சிப்பவர்கள் அறிவு சார்ந்த ஆக்கபூர்வமான விமர்சனங்களை வெளியிடுவதன் மூலமும் தங்கள் அறிவாற்றல் எழுத்தாற்றலை விருத்தி செய்து கொள்ளவும் பெருமையை தேடிக் கொள்ளவும் முடியும்

 

 

 

 

Advertisements
This entry was posted in Uncategorized. Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s