அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் ஊழல்களை மௌலானாவிடம் கவலையுடன் தெரிவித்த மாகணசபை உறுப்பினர் சிப்லி பாரூக்

 

downloadமட்டகளப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் அமைச்சருமான எம் எல் ஏ ,எம் .ஹிஸ்புல்லாஹ்வினால் கடந்த மாகாண சபை தேர்தலில் நிறுத்தப் பட்டு வெற்றி பெற்ற மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாரூக் அவர்கள் காத்தான்குடியில் ஹிஸ்புல்லாஹ்வினால் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை முன் நின்று செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும் .

மகிந்த அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட்ட அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் நாட்டு முஸ்லிகளுக்கு பல்வேறு வரலாற்று துரோகங்களை செய்து வந்தார் இதனை சகித்துக்கொள்ள முடியாத மாகணசபை உறுப்பினர் அவரின் முழுக் கட்டுப் பாட்டிலிருந்தும் முழுமையாக நீங்கிக் கொண்டதோடு முஸ்லிம்காங்கிரசிலும் தன்னை இணைத்துக் கொண்டார் .

கடந்த பாராளுமன்ற தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக போட்டி இட்ட இவர் ஹிஸ்புல்லாஹ்வின் ஊழல்களை வெளியிட தயார் என்று பகிரங்க மாக காத்தான்குடி மெத்தைப் பள்ளிவாயல் முன்பாக மக்கள் முன் தெரிவித்தார். என்னிடம் இருக்கும் தகவல் களை நான் ஜம்மியத்துல் உலமாவிடமோ அல்லது சம்மேளனித்திடமோ நான் கூற தயாராக உள்ளேன் ஆனால் நான் தனிப் பட்ட முறையில் தெரிவிக்க மாட்டேன் என்றார்.

கடந்த இருவாரங்களுக்கு முன்னர் மட்டகளப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மௌலானவை ஏறாவூரில் சந்தித்த சிப்லி பாரூக் காத்தான்குடியில் அமைக்கப்பட்டுள்ள நூதனசாலையில் வைக்கப்பட்டுள்ள பிரம்பு ஒன்றினை வாங்குவதற்கு இருபது ஆயிரம் அதன் பெறுமதியாக கணித்து பற்றிச் சீட்டினை பெற்றுத்தருமாறு அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் கேட்டதாக மௌலானாவிடம் தெரிவித்தார்.

அவர் கேட்டதற்கிணங்க பெற்றுக் கொடுத்ததாகவும் தானும் இதில் பங்கு கொண்டுள்ளதாகவும் தெரிவித்தார் .

இச் செய்தியினை உறுதிப் படுத்திக் கொள்ள மௌலானாவிடம் உள்ள ஒருவரை தொடர்பு கொண்டு கேட்டபோது இச் செய்தி உண்மை என்பதை அவர் உறுதிப் படுத்தினார் அதன் ஒளிப் பதிவும் எம்மிடம் உள்ளது சிப்லி பாரூக் மறுத்தால் நாம் வெளியிட தயாராக உள்ளோம்.

இவருக்கு ஆதரவாக செயற்பட்டுவரும் காத்தான்குடி தேசிய தவ்கீத் ஜமாஅத் ஹிஸ்புல்லாஹ்உடன் இணைந்து செயற்பட்ட காலங்களில் இவரும் இணைந்தே மக்களின் பணத்தை கொள்ளை அடித்திருப்பதும் முஸ்லிம் சமூகத்திற்கு துரோகம் செய்திருப்பதும் வாக்களித்த மக்களை ஏமாற்றி இருப்பதும் தெளிவாகிறது. இவருக்கு ஆதரவளித்து வரும் தேசிய தவ்ஹீத் ஜமாஅத் இவர் தொடர்பில் விசாரணையை மேற்கொண்டு நடந்தது என்ன என்பதை மக்களுக்கு தெளிவு படுத்த வேண்டும் இல்லாவிடின் இவருக்கு ஆதரவளிப்பதை உடன் நிறுத்திக் கொள்ளவேண்டும்

This entry was posted in Uncategorized. Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s