பிரபல வட்டித் தொழிலாளி காத்தான்குடியில் பொறுப்பு வாய்ந்த பள்ளிவாயலின் உபதலைவர் ஆனார் மகல்லாவாசிகள் விசனம் உலமாக்கள் மௌனம்

image1காத்தான்குடி ஐந்தாம் குறிச்சி மீராபள்ளிவாயல் நிருவாகத் தெரிவின் போது அப்பிரதேச வாசியான கைதுரூஸ் என்பவர் உப தலைவராக தெரிவுசெய்யப் பட்டார் .

கிழக்கு மாகாணத்தில் அதிக பொருளாதார வளத்தையும் பழமையும் வாய்ந்த இப்பாளிவாயலின் நிருவாகத் தெரிவு மிகவும் சிரமத்துக்கு மத்தியில் இடம் பெற்று போதிலும் அப்பிரதேசத்தில் பல குழுக்களால் இப்பள்ளிவாயலை கைபற்றும் முயற்ச்சிகளும் இடம் பெற்று இருந்தன அப்பகுதியில் உள்ள காத்தான்குடியின் பிரபல அரசியல் வாதிகளின் கையாட்களும் பல்வேறு திசைகளிலும் நிருவாகத்தை கைபற்ற முயற்சிகளை மேற்கொண்டு வரும் நிலையில் இவர் தெரிவு செய்யப் பட்டார்.

இத்தெரிவு குறித்து மகல்லா வாசிகள் பல்வேறு எதிர்ப்புக்களை தெரிவித்திருந்த போதிலும் இவர் தெரிவு செய்யப்பட்டமை காத்தான்குடி பிரதேசத்தின் தலைமைத்துவ தெரிவு இவ்வாறே இடம் பெற்றுவருவது இளம் தலைமுறையினரை ஆத்திர மூட்டியுள்ளது இவ்வூரின் தலைமைத்துவம் தகுதியற்றோரின் கைகளுக்குச் செல்வதையே இங்குள்ள சில அரசியல் வாதிகளின் எதிர்பார்ப்புமாகும்

மேற்குறிப்பிட்ட கைதுரூஸ் என்பவர் காத்தான்குடி பிரதேசத்தில் வட்டித்தொழிலில் ஈடு பட்டுவருபவராவார் இவரது இல்லதில் வட்டித் தொழிலுக்கான காரியாலயத்தை திறந்து அதற்கான பற்றுச் சீட்டுக்களையும் வழங்கி வட்டிக் கடை போன்று நடத்திவருகிறார்.

இச்செய்தியானது இவரிடம் வட்டிக்கு பணம் பெற்ற ஒருவர் எம்மிடம் சத்திய மிட்டு உறுதிப் படுத்தி எமது புலனாய்வு செய்தியாளரிடம் இத்தகவலை வழங்கி இருந்தார் .அதன் பின்னரே இதனை பதிவிடுகிறோம்

இப்பள்ளிவாயலின் முறையற்ற தெரிவு குறித்து விசாரணையை மேற்கொண்டு உரிய நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் சம்மேளனத்தையும் ஜம்மியத்துல் உலமாவுயையும் கேட்டுக் கொள்கின்றனர்

Advertisements
This entry was posted in Uncategorized. Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s