பின்லேடன் உடலை ரகசியமாக படம் எடுத்தவர் சிக்கினார்- எப்படி?

hqdefaultசாமா பின்லேடனின் உடலை புகைப்படம் எடுத்த கடற்படை அதிகாரி ஒருவர், அமெரிக்காவின் விசாரணை வளையத்திற்குள் சிக்கியுள்ளார்.

உலகையே அச்சுறுத்தி வந்த அல்கொய்தா தீவிரவாத இயக்கத்தின் தலைவர் ஒசாமா பின்லேடனை, கடந்த 2011-ம் ஆண்டு அமெரிக்கா, பாகிஸ்தானில் உள்ள அபோதாபாத்தில் வைத்து சுட்டுக்கொன்றது.

பின்னர், அவரது உடலை கடலில் வீசிவிட்டதாக அமெரிக்க அரசு தெரிவித்தது. ஆனால், அது தொடர்பான புகைப்படங்கள் எதையும் தேச பாதுகாப்பு கருதி வெளியிடவில்லை. பின்லேடனை கொல்ல அமெரிக்கா அனுப்பிய அதிரடிப்படை,  கடற்படையை சேர்ந்த ‘சீல் 6’ என்ற பிரிவை சேர்ந்தது.

இந்நிலையில், இந்த ‘சீல்’ கடற்படையில் இடம்பெற்றிருந்த அதிகாரி மேத்யூ பிஸ்ஸோனேட் என்பவர், ஒசாமாவின் உடலை புகைப்படம் எடுத்தது அம்பலமாகியுள்ளது, தற்போது ஓய்வு பெற்றுள்ள இவர், தான் எழுதியுள்ள புத்தகத்தில் இதுதொடர்பான தகவலை வெளியிட்டுள்ளார்.

இந்த தகவலால் அமெரிக்காவின் விசாரணை வளையத்திற்குள் சிக்கிய இவர், குற்ற வழக்குகளில் இருந்து தப்பிப்பதற்காக தனது கணினியில் வைத்து இருந்த பின்லேடன் புகைப்படத்தை ஹார்டு டிஸ்குடன் சேர்த்து ஒப்படைத்துள்ளார்.

புகைப்படத்தை தவிர்த்து மேலும் சில தகவல்கள் அவரது கணினியில் இருந்தையடுத்து,  விரிவான விசாரணையை அமெரிக்கா ஆரம்பித்துள்ளது.

This entry was posted in Uncategorized. Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s