வெற்றிடத்துக்கான தேசியப்பட்டியல் NFGGக்கு வழங்கப்படாவிட்டால் (?) ஹக்கீமின் தேசியப்பட்டியல் மந்திரத்துக்கு NFGG முற்றுபுள்ளி வைக்குமா ???

அப்துல் மஜீத் முஹம்மட் பர்சாத்

pmgg-01-300x172இக்கட்டுரை நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தவிசாளர் அப்துர் ரஹ்மான் பாராளுமன்றம் போக வேண்டும் என்ற நோக்கத்தில் எழுதவில்லை, NFGG+SLMC செய்துகொன்ட ஒப்பந்தப்படி NFGGக்கு பாராளுமன்ற பிரதிநிதித்துவம்
கொடுக்க வேண்டும் என்ற நல்லெண்ணத்திலயே எழுதுகின்றேன்.

கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் 17ம் திகதி நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் + நல்லாட்சிச்கான தேசிய முன்னணி ஆகிய இரு அணிகள் எதிரும் புதிருமாக இருந்த (NFGG+SLMC ALLIANCE) என்ற கூட்டு ஒப்பந்தம் மூலம் இனைந்து செயற்ப்பட்டது பலர்மத்தியில் பல வரவேற்புக்களும் சிலர் மத்தியில் சில விமர்சனங்களாகவும் பார்க்கப்பட்டது.

SLMC+NFGG இந்த கூட்டனி மூலம் SLMC தனது இலக்குகளை வெற்றிகரமாக அடைந்துகொண்டது இந்த கூட்டணி மூலம் முஸ்லிம் காங்கிரஸ் இரண்டு ஆசனங்களை பெற்றுக் கொண்டது. NFGG,SLMC உடன் இனையாவிடில் முஸ்லிம் காங்கிரஸ் ◆அம்பாறை மாவட்டத்தில் ஒரு ஆசனத்தையும் ◆மட்டக்களப்பில் ஒரு ஆசனத்தையும் இளந்து இருக்கும்.

அம்பாறை மாவட்டத்தில் அட்டாளைச்சேனை தேர்தல் பிரச்சாரக் கூட்டம் ஒன்றில் SLMC தலைவர் உரையாற்றும்போது அம்பாறை மாவட்டத்தில் SLMC மூன்று ஆசனங்களை கட்சி பெறுமாக இருந்தால் அட்டாளைச்சேனைக்கு தேசியப்பட்டியல் வழங்கப்படும் என வாக்குறுதி அளித்திருந்தார் உண்மையில் SLMC தலமைக்கும் அம்பாறை மாவட்டத்தில் மூன்று ஆசனங்களை பெறுமா (?)என்ற சந்தேகமும் இருந்தது. அதனால்தான் SLMC தலமையும் அம்பாறை மாவட்டத்தில் மூன்று ஆசனம்களை பெறுமாக இருந்தால் அட்டாளைச்சேனைக்கு ஒரு தேசியப்பட்டியல் தருவதாகவும் வாக்குறுதி அளித்திருந்தது.
இறுதியில் அட்டாளைச்சேனைக்கு மாகாண சபை அமைச்சுப்பதவியை கொடுத்து அதை சமாளித்து விட்டது. சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அம்பாறை மாவட்டத்தில் மூன்று ஆசனங்களை பெறவும் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒரு ஆசனத்தை பெறவும் முஸ்லிம்காங்கிரஸின் இரண்டு ஆசனத்தையும் பாதுகாத்து கொடுத்துள்ளது NFGG.

எவ்வாறு NFGG ,SLMCயின் இரண்டு ஆசனைம்களையும் பாதுகாத்துகொடுத்தது என்று பார்த்தால்………

அம்பாறை மாவட்டத்தில் ACMC அணியினர் பெற்ற வாக்குகள்( 33102 )ACMC அணியினார் ஒரு ஆசனத்தை பெற தேவைப்பட்ட வாக்குகள் (3088 )இந்த தருனத்தில்
அம்பாறை மாவட்டத்தில் NFGG தனித்தே மாற்று கட்சியுடன் இனைந்து போட்டி இட்டு கனிசமான வாக்குகளை பெற்று இருக்கும் Acmcக்கு ஒரு ஆசனம் பெற குறைவாக இருந்த வாக்குகளில் அரைவாசியை NFGG பெற்று இருந்தால் வெறும் (1545 )வாக்குகளை பெற்று இருந்தால் SLMC ஒரு ஆசனத்தை இழந்து இருக்கும் மட்டக்களப்பு மாவட்டத்தில் SLMC (38477)வாக்குகளை பெற்றது அதில் NFGG யின் வேட்பாளரின் வாக்குகள் (12000மேல்) பெற்றிருந்தார்.
NFGG+SLMC கூட்டனி வராவிட்டால் இந்த ஆசனம் UPFAக்கு சென்று இருக்கும் முஸ்லிம் காங்கிரஸின் இரண்டு ஆசனம்களை NFGG பாதுகாத்தது என்பதை யாரும் மறுக்க முடியாது.

இப்படியான பல விட்டுக்கொடுப்புகளையும்,பல தியாகங்களையும் தனது சொந்த பணத்தில் தனித்துவமாக நின்று வெற்றியடையச் செய்த #ந.தே.மு யை புரக்கனிப்பது சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் எதிர்காலம் கேள்விக்குறியாகவும் ஆபத்தானதாகும் மாறும் .

எங்கள் சமூகத்துக்கு தேவைப்படுவதும் நாங்கள் ஆசைப்படுவதும் நமது சமூகத்துக்கு நடந்த,நடக்க இருக்கின்ர இனவாதங்களுக்கு பாராளுமன்றம் ஊடாக முற்றுப்புள்ளி வைக்கத்தான் இன்று நமது சமூகத்தின் அரசியல்வாதிகளின் பிற்போக்குத்தனத்தால் பாராளுமன்ற பதிவுப்புத்தகத்தில் (கென்சாட்) அளுத்கம பிரச்சினையை தூண்டியவர்கள் முஸ்லிம்கள் என பதியப்பட்டுள்ளது.

அதே
பாராளுமன்றத்தில்தான் வசீம் தாஜுதீன் படுகொலை தொடர்பாக சகோதரர் முஜிபுர் ரஹ்மானால் பேசப்பட்டபோது அந்த பதிவை பாராளுமன்ற பதிவில் (கென்சாட்)யில் இருந்து நீக்குமாறு பெரும்பான்மை இனத்து எம்பிக்கள் போராடனார்கள் வெற்றியும் கண்டார்கள் இறுதியில் முஜிபுர் ரஹ்மானால் பாராளுமன்றத்தில் வசீம் தாஜுதீனின் படுகொலை தொடர்பாக ஆற்றப்பட்ட உரை பாராளுமன்ற பதிவில் இருந்து
(கென்சாட்) சபாநாயகரின் அனுமதியுடன் நீக்கப்பட்டது இப்படியான பாராளுமன்ற இனவாதத்துக்கு எதிராக பாராளுமன்றத்தில்
நேர்மையாக குரல் கொடுக்க முஸ்லிம்கள் சார்பாக யாரும் இல்லை என முஹிபுர் ரஹ்மானின் விடயத்தில் புலனாகியது.

இந்த பாராளுமன்ற இனவாதத்தை தோற்கடிக்க தகுதியானவர்கள் உள்ள கட்சி என்றால் அது எனது பார்வையில் NFGGதான் அதற்கமைவாகத்தான் ஒரு பாராளுமன்ற பிரநிதுவத்தை போட்டியிட்டு அல்லது தேசியப்பட்டியல் மூலம் சென்று விடலாம் என்ற நம்பிக்கையில் இன்று வரை உள்ளோம்…

அதற்கு காரணமாக உள்ள NFGG+SLMC புரிந்துணர்வு உடண்படிக்கையில் 11 சரத்துக்களில் உள்ள இரு சரத்துக்களை பதிவிடுவது பொருத்தம் என நினைக்கின்றேன்.

1, சரத்து இலக்கம்…
{8}எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலைத் தொடர்ந்து அமையவிருக்கும் புதிய அரசாங்கத்தில் பொருத்தமான இடத்தினையும்,வாய்ப்பினையும்
NFGGபெற்றுக்கொள்வதனை SLMCஉத்தரவாதப்படுத்தும்.

2, சரத்து இலக்கம்
{9} பொதுத் தேர்தலைத் தொடர்ந்து NFGGயின் பாராளுமன்ற உத்தரவாதப்படுத்த வேண்டிய அவசியம் ஏற்படும் பட்சத்தில் SLMC பரிசீலித்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும். அதற்க்கேற்ற வகையில் NFGGயினால் பிரேரிக்கப்படும் ஒருவர் சமர்பிக்கப்பட்டும் தேசியப்பட்டியலில் உள்வாங்கப்படுவார்.

இப்படியான ஒப்பந்தத்தை நம்பினோம் தேர்தலும் முடிந்தது NFGGயினால் SLMC திட்டமிட்ட படி உச்ச வெற்றியும் அடைந்தது. ஆனால் தேசியப்பட்டியல் கதை ஒரு மாயமாக மாறுவதை அவதானிக்க முடிகிறது இந்த ஒப்பந்தம் இன்னும் நடைமுறையில் உள்ளதா (?)
என்று என் மத்தியில் கேள்விக்குறியாகவே உள்ளது.

தற்போது தற்காலிகமாக வழங்கப்பட்டிருந்த SLMCயின் தேசியப்பட்டியல் உருப்பினர் SLMCயின் தலைவரின் சகோதரர் ஹபீஸ் தனது ராஜினாமாவை அறிவித்துள்ளார்.இந்த வெற்றிடத்துக்கு யார் தெரிவாகுவார்கள் என்ற பந்தயப்போட்டியும்,கட்சி செயலாளரின் மிரட்டல் அறிக்கையும் வெளிவருகிரது இந்த தேசியப்பட்டியலுக்கு உரித்தான NFGGயின் தலைமத்துவ சபை மெளனமாக இருக்கின்றது இந்த வெற்றிடத்துக்கான இடத்துக்கு NFGGயின் பிரநிதுத்துவம் உள்வாங்கப்படாவிட்டால் NFGG+SLMC ஒப்பந்தத்தின் சரத்து இலக்கம் {11} மேற்படி உடன்பாடுகளில் முரண்பாடுகள் ஏற்படும்இடத்தே,அல்லது ஒரு சாரார் மேற்படி உடண்படிக்கையில் தொடர்ந்து நிற்க முடியாது என்று கருதும் சந்தர்ப்பத்தில் மேற்படி உடன்படிக்கையில் இருந்து வெளியேறும் சுதந்திரம் இரு சாராருக்கும் இருக்கும். என்ற அடிப்படையில் NFGGஇந்த ஒப்பந்தத்தை முடிவுக்கு கொண்டு வரவேண்டும்.

வெற்றிடத்தில் உள்ள தேசியப்பட்டியல் NFGGக்கு வழங்கப்படாவிட்டால் அன்றுடன் ஒப்பந்தம் முடிவுக்குகொன்டு வரவேண்டும். NFGGயின் தலமைத்துவ சபை இந்த விடயத்தை ஒவ்வொரு ஊராக சென்று முஸ்லிம்காங்கிரஸின் இந்த வரலாற்று துரோகத்தையும் மக்கள் மன்றில் பகிரங்க படுத்துமாறும் அத்துடன் ஹக்கீமின் தேசியப்பட்டியல் மாயையை முடிவுக்கு கொன்டு வறுமாறும் வேண்டிக்கொள்கிறேன்.

AM.Farsath
Kattankudy

Advertisements
This entry was posted in Uncategorized. Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s