நகை திருட்டு! திருடர்களை ஒரு மணிநேரத்திற்குள் மடக்கிப் பிடித்த பொலிஸார்!

வாழைச்சேனை பொலிசாரின் திறமை !

வெள்ளிக்கிழமை, 08 சனவரி 2016

12541092_974634935905290_8757311478775226134_nவீதியால் சென்று கொண்டிருந்த பெண்ணின் தங்க மாலையை திருடிச் சென்ற நபரையும், அதனை அடகு வைக்க உதவிய சந்தேக நபரையும் சம்பவம் நடந்து ஒரு மணிநேரத்திற்குள் வாழைச்சேனைப் பொலிஸார் மடக்கிப் பிடித்துள்ளனர்.

இது தொடர்பாக தெரியவருவதாவது,

வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் கண்ணகிபுரம் கிராமத்தைச் சேர்ந்த பெண் தனது வீட்டுக்குத் தேவையான பொருட்களை சந்தையில் கொள்முதல் செய்து கொண்டு திரும்பிக் கொண்டிருந்த வேளை,

வீட்டிற்கு அருகில் வைத்து முகம் மூடிய தலைக்கவசத்தை அணிந்த இளைஞர் பாசிக்குடாவிற்கு செல்லும் வழி எது என்று கேட்டு அவரிடம் கதை கேட்டதாகவும் அவர் வழியை காட்டவும் மோட்டார் சைக்கிளில் வந்தவர் குறித்த பெண்ணை அவரது காலால் தள்ளிவிட்டுள்ளார்.

பின்னர் தவறுதலாக பட்டு விட்டது என்று சொல்லி என்னை தூக்குவது போல் நடித்து அவரது தங்க மாலையை பறித்துக் கொண்டு மோட்டார் சைக்கிளில் சென்று விட்டார்.

எனினும் பாதிக்கப்பட்ட பெண் மோட்டார் சைக்கிள் இலக்கத்தை தெரிவித்து பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

இந்நிலையில், பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எடுத்துக் கொண்ட துரித நடவடிக்கையின் பயனாக மாலையை பறித்த சந்தேக நபரும் அடகு வைக்க உதவிய அவரது நண்பரும் வாழைச்சேனை பிரதான வீதியில் உள்ள தனியார் வங்கியில் மாலையை அடகு வைப்பதற்கு இருந்த சமயம் சந்தேக நபர்கள் இருவரையும் பொலிஸார் கைது செய்தனர்.

இதேவேளை, மூன்றரை பவுன் எடைகொண்ட தங்க மாலையையும் திருடுவதற்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் தலைக்கவசம் என்பவற்றையும் கைப்பற்றியுள்ளனர்.

19 வயது இளைஞர்களான சந்தேக நபர்கள் இருவரும் வாழைச்சேனை பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் இவர்களை இன்று வாழைசசேனை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகவும் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

Advertisements
This entry was posted in Uncategorized. Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s