மீலாது விழாவிற்கு எதிராக நடந்த ஆர்ப்பாட்டம் அநாமோதயா ஆர்ப்பாட்டமா ?

விமர்சனம்களும் பதிலும்
……… ×…………×………×………×………

abdul majeed mohamed farsath

12483862_906647596098537_814474574_nகடந்த 01.01.2016 அன்று அத்வைத் வழிகேடர்களால் காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் நடைபெற இருந்த “மீலாது நபி விழா” விற்கு எதிராக ஒரு ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றது அனைவரும் அறிந்த விடயம்…இந்த ஆர்ப்பாட்டத்தை நமதூரில் உள்ள தஃவா இயக்கம்? தங்கள் மீதுள்ள இயக்க காழ்புணர்ச்சிகளால் ஆர்ப்பாட்டத்தை விமர்சிப்பதை அவதானிக்க முடிகிறது அந்த வகையில் சகோதரர் நியாஸ் “அசத்தியத்திற்கெதிரான அநாமதேய ஆர்ப்பாட்டம்; ஓர் பல்கோணப்பார்வை” எனும் தலைப்பில் ஒரு கட்டுரையும் வெளியிட்டிருந்தார் அதற்கான ஒரு மறுப்பும் அதன் நியாயத்தன்மையையும் உண்மை நிலைப்பாட்டையும் பதிவிடுகிறேன்….

இந்த ஆர்ப்பாட்டம் ஏன் நடைபெற்றது ? யாரால் நடாத்தப்பெற்றது ?

1979ம் ஆண்டு அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவால் வஹ்ததுல் வுஜுத் இஸ்லாமிய #அகீதா கொள்கைக்கு எதிராக செயற்படுகிரார்கள் என்பதற்காக அப்துர் ரவூப் தரப்பினருக்கு “முர்த்தத்” என பட்டம் கொடுத்து இவர்கள் இஸ்லாத்தில் இருந்து வெளியேற்றப்பட்டவர்கள் என தீர்ப்பழிக்கப்பட்டு மக்கள் முன் நிறுத்தப்பட்டவர்கள் என்பதை யாவரும் அறிந்ததே

எமது பெளத்த நாட்டில் அனைவருக்கும் கருத்து,மத சுதந்திரம் உண்டு அந்த வகையில் முஸ்லிம்களின் மார்க்க விடயம்களை தீர்மானிக்கும் சக்தியாக ஜம்இய்யதுல் உலமா மாத்திரம்தான் உண்டு அப்துர் ரவூப் தரப்பினரை “முர்த்தத்” இஸ்லாத்தில் இல்லாதவர்கள் என தீர்ப்பழித்து அவர்களை இஸ்லாத்தில் இருந்து வெளியேற்றம் செய்துள்ளது.

இஸ்லாத்தில் இருந்து வெளியேற்றம் செய்யப்பட்டவர்கள் இஸ்லாத்தில் இல்லாத வழிமுறைகளை நமதூருக்குள் நடாத்துவதற்கு எதிராக ஜம்இய்யதுல் உலமா நகரசபை, முதலமைச்சர், பொலிஸ் நிலையம் வரை இந்த இஸ்லாமிய விரோத நிகழ்வை நிறுத்துமாறு கோரி எழுத்து மூலம் வேண்டிக்கொன்டிருந்தது ஆனால் பொலிஸாருக்கு அனுப்பிய கடிதத்தை வைத்து பொலிஸார் நீதிமன்றம் சொன்று இருக்க வேண்டும். பொலிஸாரை நீதிமன்றம் செல்லாமல் தடுத்தது யார் என்று நான் சொல்லி தெரியவேண்டியது கிடையாது(?)
இந்த முயற்சிகள் வெற்றி அழிக்காததால் மீலாது நபிவிழா நடைபெற்ற இடத்திற்கு முன்பாக ஒரு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தை தாருல்அதர் அமைப்பு நடாத்தியதாகவும் ★அஸ்பர் மெளலவியால் கையழிக்கப்பட்ட மகஜரின் பலனாகவோ எதுவித இடையூறும் இன்றி மீலாதுநபிவிழா சுமூகமான முறையில் நடைபெற்று முடிந்ததாக ஒரு உண்மைக்கு புறம்பான செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

இந்த ஆப்பாட்டத்தை குறித்த நிகழ்வை விரும்பாத சில சகோதர்கள் ஏற்பாடு செய்திருந்தார்கள் குறித்த சகோதர்கள் தான் எனக்கும் தகவலை சொன்னார்கள் இதை உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு எத்திவைக்குமாறும் கூறினார்கள் அவர்கள் அந்த ஆர்ப்பாட்டத்துக்கு உரிமையும் கோரியுள்ளார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமா கிளையில் இருந்து செயலாளர் ஜலீல் (மதனி) அமானி நளீமி உற்ப்பட உறுப்பினர்கள். அன்றய தினம் பகல் உணவு கூட சாப்பிடாமல் பொலிஸ் நிலையம் வரை வந்து இஸ்லாத்திற்கு எதிரான கூட்டத்தாரின் இந்த நிகழ்வை ரத்து செய்ய கோரி போராடினார்கள் அதற்க்கு பல சகோதர்கள் சாட்சி.

பொலிசார் விசாரணையில் ஜம்இய்யதுல் உலமா தரப்பில் இருந்து மௌலவி அப்துல் ரவுப் தரப்பினர் பற்றி மிக முக்கியமான விடயங்களை பொலிசாருக்கு தெளிவுபடுத்தினார்க்ள் அந்த விடயங்களை இங்கு குறிப்பிடுவது அவசியமற்றது.

DIG, ASP, OIC இடம் இந்த நிகழ்வை நிறுத்துமாறு கூறி முன்கூட்டியே பொலிஸ் மற்றும் நகரசபை செயலாளர் போன்றவர்களுக்கு டிசெம்பர் 25ஆம் திகதி கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளதாக அக்கடிதங்களின் பிரதிகளும் காண்பிக்கப்பட்டது இவ்வாறு பல போராட்டத்திற்கு மாத்தியில் இறுதியாக பொலிசார் ஆர்ப்பாட்ட காரர்களிடம் வினையமாக வேண்டியது.

இந்த நிகழ்வை ரத்து செய்ய நீதி மன்ற அனுமதி தேவை தற்பொழுது கடைசி நேரம் என்பதால் நீதி மன்றம் சென்று அனுமதி பெற முடியாது ஆகையால் குறித்த நிகழ்வில் ஊர்வலம், பைத் ஆட்டம் பாடல் என வீதியில் இடம்பெற இருக்கும் இவ்விடயங்களை தடுத்து மண்டபத்திற்கு உள்ளே மாத்திரம் நிகழ்ச்சியை நடத்த செய்கிறோம் அத்தோடு மண்டபத்திற்கு வெளியில் பொருத்தப்பட்டுள்ள ஒலிபெருக்கி சப்தங்களை நிறுத்தி வைக்கவும் உத்தரவு இடுகிறோம் எனவும் பொலிசார் ஆர்ப்பாட்ட காரர்களிடம் உறுதியளித்தார்கள்.

ஆகையால் இந்த ஆர்ப்பாட்டத்தால் இந்நிகழ்வு சுமூகமாவும்,சிறப்பாகவும் நடைபெற்றது என்பது உண்மைக்கு புரம்பான தகவலாகும்.
நபிவழியில் சொன்னவாறு
1.உள்ளாத்தால் தடுங்கள்
2.நாவால் தடுங்கள்
3.கரத்தால் தடுங்கள்
நாங்கள் உள்ளத்தால் வெறுத்தும் நாவால் தடுத்தும் கையால் முடிந்தளவு தடுக்க முயன்றும் உள்ளேம்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் 150 போர்தான் கலந்துகொன்டார்கள் அதில் பச்சீலம் சிறார்கள் தான் கலந்து கொன்டார்கள்
என விமர்சிப்பது நியாயமா ?

பலஸ்தினில் சின்னச்சிறுகுழந்தைகள் கல்லால் எரிந்து போராடுவதை பார்க்கும்போது அந்தச் சின்னச் சிறுசுகளின் உள்ளத்தில் இருக்கும் ஈமானிய பலமும் போராட்டாமும் நம் பெரியார்கள் மத்தியில் இருக்கின்றதா என்று ஒவ்வொருவரின் உள்ளங்களும் பதில் சொல்லும். அது போன்று யார் நயவஞ்சகன் ? யார் முனாபிக் ? என பிரித்துக்கட்டுவதும் ஒரு போராட்ட களம்தான் .12506734_906631299433500_1829157469_n

ஒரு சுமூகமான சூழலில் யார் முனாபிக், யார் முஃமீன் என்பதை அறிந்துகொள்ள முடியாது. நயவஞ்சகர்கள் எங்கே வேண்டுமானாலும் இருப்பார்கள்.

#முனாபிக்கள் உங்களுடன் முதல் வரிசையில் தொழுபவராக கூட இருக்கலாம்

#உங்கள் பள்ளிவாசல்களில் குத்பா நிகழ்த்துபவராகக் கூட இருக்கலாம்.

#நீங்கள் மார்க்க விடயம் சம்பந்தமாக கேள்விகள் கேட்டு உங்களுக்கு பதிலளிக்கின்ற மௌலவி, ஆலிம், அறிஞர், முள்ளக்களாக
கூட முனாபிக் இருக்கலாம்.
யார் உண்மையான முஃமின், யார் முனாபிக் என்பதை உங்களால் கண்டு கொள்ள முடியாது.

ஒரு யுத்த களம் தான் இதனை பிரித்துக்காட்டக் கூடியது. யுத்தத்தின் கடினமான சூழல்தான் முனாபிக்களின் உண்மை முகத்தை வெளிப்படுத்தும முஃமீன்களும் முனாபிக்களும் இரண்டறக் கலந்துள்ள நிலையில் முஃமீன்களை முனாபிக்குகளிடம் இருந்து வேறாக பிரித்துக் காட்டுவதாக அல்லாஹ் அல்குர்ஆனில் (3:179) கூறுகின்றான். உஹது யுத்தத்தின் போதே இந்த வசனம் அருளப்பட்டது. அல்லாஹ்வின் ஏற்பாட்டின் பேரிலேயே உஹதில் இரண்டு படைகளும் சந்தித்துக் கொண்டன. அந்த சந்தர்ப்பத்தில் தான் அல்லாஹ் முனாபிக்களை முஃமின்களிடமிருந்து வேறாக பிரித்துக் காட்டினான். “அல்லாஹ்வுடைய பாதையில் போரிடுங்கள், இந்த மார்க்கத்தை பாதுகாத்து நிலைதிறுத்த வாருங்கள்” என அவர்களிடம் சொல்லப்பட்ட போது “உண்மையில் இவ்வாறான ஒரு யுத்தம் நடை பெறும் என்று தெரிந்திருந்தால் நாங்களும் உங்களைப் பின் தொடர்ந்திருப்போம்” என முனாபிக்களின் தலைவன் அப்துல்லா இப்னு உபை கூறினான். உள்ளத்தில் ஒன்றை வைத்துக்கொண்டு வாயால் ஒன்றைக் கூறியதன் மூலம் அந்த நயவஞ்சகர்கள் இறை மறுப்பின் விளிம்பிற்கே சென்றுவிட்டனர். அல்லாஹ்தான் யாவற்றையும் நன்கறிந்தவன் (பார்க்க 3:166-167). போர் நடைபெறப் போகின்றது என்று தெரிந்திருந்தும் உஹத் களத்தை விட்டு தனது கூட்டத்தாருடன் அப்துல்லாஹ் இப்னு உபை வெளியேறி இருந்தான். தமது நாவினால் சொன்னதற்கு முற்றிலும் மாற்றமாகவே அவர்கள் நடந்து கொண்டனர். இஸ்லாத்தின் மூலம் கிடைக்கின்ற உலக ஆதாயங்கள் அவர்களுக்கு தேவைப்பட்டன, ஆனால் அதற்கான முயற்சிகளை செய்ய அவர்கள் பங்களிப்பு செய்யவில்லை. முனாபிக்கள் எந்தவித துன்பமும் அநுபவிக்காமல் பலன்களை அநுபவிக்க நாடினார்கள். யுத்தத்தில் கலந்து கொள்ளாமல் கனீமத்களுக்கு ஆசைப்பட்டன. ஏதாவது உலக ஆதாயம் கிடைக்கும் எனபதற்காக ஒரு குழுவில் இணைந்து கொள்வதும் சோதனை/போராட்டம் என்று வருகின்ற போது குழுவை விட்டு ஒதுங்குவது, உதாரணமாக பல பெற்றோர்கள் குழந்தைகள் தங்களை மதிக்க வேண்டும், பெற்றோரின் பிள்ளைகள் மீதான உரிமை அல்லாஹ்விற்கு அடுத்த படியாக உள்ளது, பெற்றோருக்கு அடி பணிய வேண்டும் என்பன போன்ற அல்குர்ஆன் வசனங்களை பார்க்கின்ற போது அதிக சந்தோசப்படுவதும் அதே இளைஞர்களை அல்லாஹ்வின் பாதையில் போர் செய்ய அல்குர்ஆன் பணிக்கின்ற போது அந்த வசனங்கள் பெற்றோருக்கு பிடிப்பதில்லை. அந்த வசனங்களை தமது குழந்தைகள் கேட்பதிலிருந்தும் தூரமாக்கி விடுகின்றனர். சில உலமாக்களை எடுத்துக் கொண்டால் உலமாக்களை எவ்வாறு மதிக்க வேண்டும், அவர்களுடன் விவாதம் புரியக் கூடாது, பத்வாக்களை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பன பற்றி கூறுகின்ற அதே உலமாக்கள்தான் இஸ்லாம் பற்றி முழுமையாக பேச வேண்டும், எதையும் மறைக்கக்கூடாது, உயிர் போகக்கூடிய சந்தர்ப்பம் வந்தாலும் உண்மையையே உரைக்க வேண்டும் என்ற சந்தர்ப்பம் வருகின்ற போது ஓடி ஒழிந்து கொள்கின்றனர். நல்லது நடக்கும் போது இஸ்லாத்தில் இருப்பதும் கெட்டது நடக்கலாம் என்று தெரிந்து விலகிக் கொள்வதுமான இந்த இரட்டைத் தன்மை மிகக் கெட்டதாகும். விருப்பமான பகுதியைக் கூறி வெறுப்பான பகுதியை மறைப்பது மிகவும் ஆபத்தானது. இது ஒரு மனிதனை நவஞ்சகத்திற்கு இட்டுச் செல்லக்கூடியது. இஸ்லாத்தை முழுமையாக ஏற்றுக் கொள்ளுங்கள் (2:208) என அல்லாஹ் கூறுகின்றான். வசதி என்று கருதுகின்ற பகுதியை மட்டும் எடுத்துக் கொண்டு பிடிக்காத பகுதியை விட்டுவடுவது வேதக்காரர்களின் பண்பு. நபி (ஸல்) அவர்கள் அன்ஸாரித் தோழர்களிடமிருந்து உடன்படிக்கைகளைப் பெற்றுக் கொள்ளும் போது “கஷ்டமான தருணத்திலும் இலகுவான தருணத்திலும் முற்றிலும் கட்டுப்படுவோம்” என்றே பையத் ஐப் பெற்றுக் கொண்டார்கள். நீங்கள் விரும்புகின்ற போது ஏற்றுக்கொள்ளவும் வெறுக்கின்ற போது விட்டுவிடுவும் முஸ்லிம்களுக்கு அனுமதி இல்லை. மார்க்கத்தை முழுமையாக எல்லா சந்தர்ப்பத்திலும் பின்பற்ற வேண்டும்.ஐம்பது ஆயிரத்துக்குமேல் வாழும் 20ஆயிரத்துக்கு மேட்பட்ட ஏகத்து சிந்தனை உள்ள ஊரில் வெறும் 150போர்தான் ஆர்பாட்டத்தில் கலந்துகொன்டார்களா? என சந்தர்ப்பவாத கேள்வி ஒன்று எழுப்பபடுகிறது. . கடந்த 13.05.2015 காத்தான்குடியில் அமைக்கப்பட்ட உருவச்சிலைக்கு எதிராக NFGG ஏற்பாடு செய்திருந்த “மக்கள் அளுத்த போராட்டம்” என தலைப்பிட்டு ஒரு நாளைக்கு முன் அனைத்து தரப்பினரும் கலந்துகொள்ளுமாறு வேண்டப்பட்டிருந்தது. 12506970_906647272765236_1495140250_n

ஆனால் இந்த ஆர்ப்பாட்டத்தில் வெரும் 29 பேர்தான் கலந்து கொன்டிருந்தார்கள் 20000 மேற்பட்ட ஏகத்துவ சிந்தனையில் உள்ள நமதூரில் உருவச்சிலைக்கு எதிரானவர்கள் வெறும் 29 போர்தான் என கருத முடியுமா ? ஒவ்வொரு இயக்கத்தின் காழ்புணர்வும்,பழிவாங்களும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு செல்கிறது சந்தர்ப்பத்திற்கு ஏற்ப தஃவாவும் அதற்கு அமைய மார்க்கத்தை பயன்படுத்துவதையும்தான் அவதானிக்க முடிகிறது. சஹ்ரான் மெளலவி சம்பந்தமாக அஸ்பர் மெளலவி சம்மளனத்தில் ஆற்றிய உரை தவறாக இருக்கலாம் அதற்காக அவரின் அனைத்து செயற்பாட்டையும் விமர்சிப்பது அவரின் தஃவாவை புரந்தள்ள முடியாது அது இஸ்லாமிய வழிமுறையும் கிடையாது. ஆர்ப்பாட்டம் நடாத்திய அதர் மீலாதுவிழா நடைபெற்று ஒருவார காலம் ஆகியும் அதில் முன்வைக்கப்பட்ட மார்க்க விரோத கருத்துக்களுக்கு பதில் சொல்லாமல் மெளனித்து கிடப்பது ஏன் என்றும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது ? இதுவும் நியாயமான வாதம் கிடையாது. ஹிஸ்புல்லாஹ் மண்டப்பத்தை 03.01.2016 அதர் தரப்பால் பதில் கூறவே பதிவு செய்யப்பட்டு ரத்து செய்யப்பட்டுள்ளது. மீலாது நபிவிழாவின் கானொனிகள் கிடைக்கபெராததால் குறித்த நிகழ்வு பிற்போடப்பட்டுள்ளதாக அதர் உறுப்பினர் ஒருவர் என்னிடம் தெரிவித்தார் அதுபோன்று சஹ்ரான் மெளலவியும் தனது முகப்புத்தகத்தில் இவ்வாரான பதிவென்றை 09.01.2016 பதிவேற்றியுள்ளார். “தேசிய தவ்ஹீத் ஜமாஅத் ஏன் தாமதிக்கிறது? கடந்த 01.01.2016 அன்று காத்தான்குடி அத்வைதிகள் தமது மீலாத் விழாவை ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் நடாத்தியிருந்தனர். அத்வைதிகளின் அனைத்து வாதங்களுக்கும் பதில் சொல்லும் தவ்ஹீத் ஜமாஅத் இதற்கு ஏன் இன்னும் பதில் சொல்லவில்லை? என்று பலர் கேட்கின்றனர். எம்மைப் பொருத்தமட்டில் கேள்விப்பட்ட செய்திகளையும், காற்றில் வரும் வாதங்களையும் வைத்து பதில் மாநாடு போட முடியாது. அவர்களது மாநாட்டில் பேசியவைகள் லைவ் செய்யப்பட்டாலும் போதியளவு அவைகள் தெளிவாக இல்லை. யாராவது அந்நிகழ்வின் ஒளித் தொகுப்பை எமக்குத் தந்துதவினால் இன்ஷாஅல்லாஹ் தாமதமின்றி மறுப்பு மாநாட்டை ஒழுங்கு செய்வோம்.இந்நிகழ்வை ஒழுங்கு செய்த சுன்னத் வல்ஜமாஅத் சகோதரர்களே..! உங்கள் கருத்தில் உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் நிகழ்வின் காணொளியை எம்மிடம் ஒப்படையுங்கள்!அத்துடன் இவர்கள் மாநாட்டில் விநியோகித்த நூலின் பிரதி யாரிடமாவது இருந்தால் தந்துதவுங்கள். அல்லாஹ் போதுமானவன” இவ்வாறு இருக்கும் போது மீலாது விழாவுக்கு எதிராக பதில் சொல்லாமல் மெளனித்து கிடப்பது ஏன்? எனும் கேள்வியும் சந்தர்ப்பவாத கேள்வியாகத்தான் உள்ளது. அஸ்பர் மெளலவியை விட சஹ்ரான் மெளலவிக்கு தேடலும் ஆற்றாலும் இருக்கலாம் அப்துர் ரவூப் மெளலவி விடயத்தில் அஸ்பர் மெளலவி அனுவனுவாக அவதானித்து மருப்பு பேசுவார் என எதிர்பார்க்கவும் முடியாது அவரால் முடிந்ததை அவர் செய்யட்டும் சஹ்ரான் மெளலவியால் முடிந்தை அவர் செய்யட்டும் ஆனால் நீங்கள் இதனை உங்களிடையே போட்டியாக எடுத்துக்கொண்டால் அது மார்க்க விடயத்தில் அனுமதிக்க முடியாத ஒன்றாகும். இறுதியாக சகோதரர் நியாஸ்,சஹ்ரான் மெளலவி,தாருல்அதர் அமைப்பிடம் அன்பான வேண்டுகோள். உங்களுக்குள் இருக்கும் இயக்க வேறுபாடுகளையும்,காழ்ப்புணர்ச்சியையும் மறந்து நமதூரில் குறிப்பாக அப்துர்ரவூப்,அரசியல்தலமையை உருவாக்குதல்,நாட்டில் நடக்க இருக்கும் இனவாத விடயம்களுக்கு ஒற்றுமை படவேண்டிய காலகட்டத்தில் இருக்கும்போது உங்கள் பழிவாங்கள் தொடர்வது ஆரோக்கியமானது கிடையாது உங்களுக்குள் இருக்கும் கசப்புத்தன்மைகளை ஒரு புரம் தள்ளி வைத்துவிட்டு ஒற்றுமை எனும் வட்டத்துக்குள் வருமாறு அன்பாய் வேண்டிக்கொள்கிறேன்.

 

 

 

 

Advertisements
This entry was posted in Uncategorized. Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s