காத்தான்குடியில் இஸ்லாமிய விரோதக் கொள்கைகளை பிரச்சாரம் செய்து வரும் குழுவினரால் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மீலாத் விழா நிகழ்வில் கலந்து கொள்வதற்காக இந்தியாவில் இருந்து வருகைதர உள்ள ஜமாலி என்பவனை கண்டித்தும் மீலாத் விழா இஸ்லாத்தில் தடுக்கப்பட்டது என்பதனை தெளிவு படுத்தியும் இவ் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது .
இதில் காத்தான்குடியிலுள்ள இஸ்லாமிய பிரச்சார இயங்கங்களைச் சேர்ந்த சகோதர்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
இந் நிகழ்வினை தடுப்பதற்கான நடவடிக்கைகளை சம்மேளனம் மேற்கொண்டிருந்த போதிலும் அரசியல் வாதிகளின் செல்வாக்கினால் பொலிசார் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் ஆதங்கப்பட்டதை காணக் கூடியதாக இருந்தது
Advertisements