சமூகத்திற்காய் இருபத்தி மூன்று ஆண்டுகளுக்கு பிற்பாடும் கண்ணீர் வடித்த வாழைச்சேனை YMMA….!!!(video)

10320536_1668682253416222_4632037686335406227_nதமிழ் ஈழ விடுதலை புலிகளால் 26.12.1992ம் ஆண்டு சிதறுண்டு போகும் குண்டுகளால் சின்னா பின்னமாக்கப்பட்ட கல்குடாவின் படித்த முஸ்லிம் தலைமைகளான மட்டு மாவட்ட உதவி அரசாங்க அதிபர் வை. அஹமட், உதவி பிரதேச உதவி அரசாங்க அதிபர் ஏ.கே.உதுமான், முதலாவது கல்குடா பிரதேசத்து முஸ்லிம் சட்டத்தரணி ஏ.பி.எம்.முஹைடீன்.,அதிபர் எஸ்.ஏ. மஃமூத்., யூ.எல்.சாஹுல் ஹமீட் ஆகியோர்கள் கொலை செய்யப்பட்டமையினை கல்குடா வாழ் முஸ்லிம் சமூகம் அன்று உணர்ந்து கொண்ட சோகம் என்ற வரைவிலக்கணமும், அதன் எதிர் ஒலியும் வாழைச்சேனை அந் நூர் தேசிய பாடசாலையின் ஆராதனை மண்டபத்தில் 26.12.2015 மாலை ஞாபகப்படுத்தியது.

அதையும் தண்டி 1988ம் ஆண்டு சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசின் ஓட்டமாவடி பிரதேச சபையின் முதலாவது தவிசாளர் எம்.ஏ.எம்.புஹாரி விதானை, ( கடத்தப்பட்டு ஜனாஸா கிடைக்க வில்லை) 1989ல் இன்றும் ஆசிரியர் என்றால் இவரை போன்றுதான் ஆசிரிய தொழிலினை செய்ய வேண்டும் என்று கல்குடாவின் அனைத்து பாடசாலைகளினதும் அதிபர்கள் வாய்விட்டு வியற்கும் அளவிற்கு தனது ஆளுமையினை பறைசாற்றிய ஆசான் எம்.ஐ.எம். சரீஇஃப் அலியினை வீட்டிலிருந்து வீதிக்கு அழைத்து வந்து துடிக்க கொலை செய்யப்பட்டமை , 1990ல் கல்குடாவின் தமிழ் சமூகமும் முஸ்லிம் சமூகமும் தேங்காய் பூவும் பிட்டும் எவ்வாறு இருக்குமோ அவ்வாறுதான் வாழ வேண்டும் என்று மீராவோடையில் வாழ்ந்து காட்டிய யூ.எல்.எம்.முஹம்மது முத்து சேர்மன் (கடத்தப்பட்டு ஜனாஸா கிடைக்கவில்லை) போன்றோர்களை ஜாபகப்படுத்தும் முகமாக கல்குடாவின் இளம் சமூதாயம் அதனோடு சேர்த்து வழிகாட்டும் அரசியல், சமூக, கல்வி, கலாச்சார, சமய முக்கியஸ்தர்களை அழைப்பித்து இருபத்தி மூன்று ஆண்டுகள் களிந்தும் காலத்தினால் அழிக்க முடியாத வரலாற்றினை வாழைச்சேனை YMMA அசைபோட்ட இரங்கள் நிகழ்வானது பிரசன்னமாயிருந்த அதீதிகளையும், கல்விமான்களை கண்களங்கச் செய்த விடயமானது நிகழ்வின் முக்கிய விடயமாக காணப்பட்டது..535098_1668682210082893_6152131830311177558_n

இதில் மன வேதனக்குறிய விடயம் என்னவென்றால்?..ஏறாவூர், காத்தான்குடியில் கொலை செய்யப்பட்டு சுஹதாக்களாக மண்ணரையில் வாழ்ந்து கொண்டிருக்கும் எமது சகோதர்களின் ஆண்டு ஞாபகார்த்த நினைவு நாளிற்கு அவ்வூர்களே திரண்டு வந்து கண்ணீர் வடிக்கும் நிகழ்வுடன் வாழைச்சேனை YMMA 26.12.2015 நடாத்திய கல்குடா முஸ்லிம்களின் சுஹதாக்கள் நினைவுக் கூட்டத்தினை ஒப்பிடும் பொழுதும், எதிர்கால சமூக சிந்தனையுடன் சமூகமளித்திருந்த சகோதரர்களின் எண்ணிக்கையை பார்த்து சமூகமளித்தவர்களின் கண்களிலே கண்ணீர் வடிந்தமையானது வைத்தமையானது முக்கிய நிகழ்வாக பதியப்பட்டிருக்கும் என்பது எனது தனிப்பட்ட கருத்தாக இருக்கின்றது…..

எமது இணைய நாளிதழ் வாசகர்களுக்காக வாழைச்சேனை YMMA அர்ப்பணிப்புடன் 26.12.2015 நடாத்திய கல்குடா சுஹதாக்கள் நினைவுப் பேரவை நிகழ்வின் காணொளியானது இங்கே பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. சுஹதாக்களுக்காக தயவு செய்து எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் பிராத்திப்போமாக……

adamrizvin odamavadi

Advertisements
This entry was posted in Uncategorized. Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s