போக்குவரத்து பொலிசாரின் மனித உரிமை மீறல் குறித்து போலிஸ் திணைக்களம் உரிய நடவடிக்கையை மேற்கொள்ளவேண்டும் பாதிக்கப் பட்ட சகோதரனின் வேண்டுகோள்

01ஏறாவூர் போக்குவரத்து பொலிசாரின் விஷமத்தனமான செயலை கண்டித்து மனித உரிமை ஆணையகத்தில் முறைப்பாடு.
சென்ற 12-12-2015 அன்று காலை 07.30 மணியளவில் ஏறாவூரை சேர்ந்தஅரச ஊழியர் ஒருவர் புன்னக்குடா வீதியூடாக மோட்டார்சைக்கிளில் சகல ஆவனங்களுடன், தலைக்கவசம் அணிந்து பயணிக்கும்போது, ஏறாவூர் வைத்தியசாலையில் கடமைபுரியும் ஒருசகோதரர் நடந்து சென்றதால் அவரை மோட்டார் சைக்கிளில் ஏற்றி வைத்தியசாலையில் இறக்கிவிட்டு புகையிரத வீதிவழியாக சென்று சட்டத்தரணி ஜனாப் அமீன் லோயரின் வீட்டுக்கு முன்பாக செல்லும்போது, அவரை வழிமறித்த போக்குவரத்து பொலிசார், சிங்கள மொழியில் முஸ்லிம்களுக்கு ஏசிவிட்டு, இவரது மோட்டார் சைக்கிளின் சாவியை ஒரு பொலிஸ் களட்டி எடுக்க, மற்றய பொலிஸ் இவ்வரச ஊழியரை கள்ளனை இழுத்துச் செல்வதுபோல், டவுசர் பெல்ட்டுக்குள் கையை செலுத்தி பிரதான வீதியூடாக பலரும் பார்த்திருக்க அழைத்து, (இழுத்து) சென்றுள்ளனர்.
காரணத்தை வினவிய போது “வைத்தியசாலையில் ஒருவரை தலைக்கவசமின்றி இறக்கியபோது, இப்பொலிசார் நிறுத்தச் சொல்லி அழைத்தும், நிறுத்தாமல் சென்றாராம் “என்று கூறியுள்ளனர்.
இதற்காக 1500/= ரூபா தண்டப்பணம் கட்டச் சொல்லி இரண்டு மணித்தியாளம் கழித்தே பத்திரம் கொடுத்துள்ளனர்.
காரணம் தெரியாமல் பிரதான வீதியால் இழுத்துச்சென்ற அவமானம் தாங்கமுடியாமல், இவ் ஊழியர் மனித உரிமை ஆணையகத்தில் முறையிட்டுவிட்டு என்னிடமும் விடயத்தை தெரிவித்தார்
(இவரை இழுத்துச்சென்ற சம்பவம் CCTV யில் பதிவாகியுள்ளது)
நியாயம் கிடைக்க அல்லாஹ் உதவுவானாக.

Advertisements
This entry was posted in Uncategorized. Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s