இந்தியாவிடம் இருந்து ரயில் பெட்டிகள் இன்ஜின்கள் உதிரிப் பாகங்கள் வாங்குவதற்கு ஜனாதிபதி தடை உத்ததரவை பிறப்பித்தார்

srisena- parlimentஇந்தியாவில் இருந்து ரயில் இயந்திரங்கள், பெட்டிகள், பேருந்து இயந்திரங்கள் மற்றும் உதிரிப்பாகங்களை கொள்முதல் செய்வதற்கு, அமைச்சரவையில் முன்வைக்கப்பட்ட திட்டத்தை, இலங்கை அதிபர்  மைத்திரிபால சிறிசேன திடீரென நிறுத்தி வைத்துள்ளார்.

இந்தியாவில் இருந்து ரயில் இயந்திரங்கள் மற்றும் பேருந்து இயந்திரங்கள் போன்றவற்றை கடன் அடிப்படையில் கொள்முதல் செய்வதற்கு அனுமதி கோரும் அமைச்சரவை பத்திரத்தை,  இலங்கை போக்குவரத்து அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா, அமைச்சரவைக் கூட்டத்தில் சமர்ப்பித்திருந்தார்.

அப்போது, இந்தியாவிடம் இருந்து ரயில் இயந்திரங்கள், பெட்டிகளைக் கொள்முதல் செய்வதற்கு அமைச்சரவையில் உள்ள ஒரு பகுதியினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

எனினும், வடக்கு மற்றும் மலையக ரயில் பாதைகளில் சேவையில் ஈடுபடுத்தவே இந்த ரயில் இயந்திரங்கள், பெட்டிகளை கொள்முதல் செய்ய திட்டமிடப்பட்டது.

மலையக ரயில் பாதைக்கு இந்திய ரயில் இயந்திரங்கள் பொருத்தமற்றவை என்றும், சீன இயந்திரங்களே பொருத்தமானவை என்றும் அமைச்சர்கள் வலியுறுத்தினர்.

அதேவேளை வடக்கிற்கான பாதையில் இந்திய ரயில் இயந்திரங்கள் பொருத்தமானவை என்றும் வலியுறுத்தப்பட்டது.

இதனால் அமைச்சரவையில், சீனாவிடம் கொள்வனவு செய்வதா இந்தியாவிடம் கொள்வனவு செய்வதா என்று குழப்பம் ஏற்பட்டது.

இதையடுத்தே, ஆய்வுகளை மேற்கொள்ளும் வரை இந்தியாவிடம் இருந்து ரயில் இயந்திரங்கள் கொள்முதல் செய்யப்படும் திட்டத்தை நிறுத்தி வைக்க அதிபர் மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார்.

அதேவேளை இந்தியாவின் டாடா மற்றும் அசோக் லேலன்ட் நிறுவனங்களிடம் இருந்து 500 பேருந்து இயந்திரங்கள் மற்றும் 500 கியர் பெட்டிகளை வாங்கவும் அனுமதி கோரப்பட்டிருந்தது. இதுவும், தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

This entry was posted in Uncategorized. Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s