கிழக்கில் அகதிகளாக்கப்பட்ட முஸ்லிம்கள் குடியேறுவதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பினர் மற்றும் அரச அதிகாரிகள் பெரும் சவால் முறியடிப்பார்களா? முஸ்லிம் அரசியல் வாதிகள்(video)

TNA-MPs-Batti-01கிழக்கில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் 1990ம் ஆண்டு விடுதலைப்புலிகளால் மட்டகளப்பு மாவட்டத்திலுள்ள முஸ்லிம் கிராமங்களிலிருந்து விரட்டப்பட்ட முஸ்லிம்களை அவர்களது பூர்வீக காணிகளில் குடி அமர்த்துவதற்கு எதிர்ப்புத்தெரிவித்து வருகின்றனர் .

1990 களில் உன்னிச்சை, உரும்காமம் ,இருநூருவில் ,கட்டைபரிச்சான் ,மினுமினுத்தவெளி ,மஞ்சத்தொடுவாய் ,கல்லியம் காடு ,ஒல்லிக்குளம் ,சிகரம் ,மண்முனை பிரதேசமக்கள் அவர்களது வாழ்விடங்களில் வைத்து 20க்கும் மேற்பட்ட பெண்களை கற்பழித்தும் உறுகாமம் பகுதியில் வெட்டிக்கொலை செய்தும் காடுகளினூடாக அயலிலுள்ள முஸ்லிம்கிராமங்களுக்கு தப்பிவந்து 20 வருடங்களாக அகதி வாழ்கையை அனுபவித்து வரும் மக்களை மீள் குடி ஏற்றுவதில் பல தடைகளை தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஏற்படுத்தி வருகின்றனர்.

இம்மாவட்டடத்திலுள்ள பல ஆயிரம் ஏக்கர் முஸ்லிம்களின் காணிகளை தமிழர்கள் அபகரித்துள்ள போதிலும் இவர்களை மனிதாபிமானத்துடன் இம்மக்களை அணுகுவதை விடுத்து இனவெறிக் கண்ணோட்டத்திலேயே மீண்டும் மீண்டும் இம்மக்களை துன்பத்தில் தள்ளிவருகின்றனர் .

கடந்த காலங்களில் தங்களது பூர்வீக காணிகளில் குடி ஏறிய மக்களின் நிலைமையும் பரிதாபகரமானதே கடந்தவருடம் செங்கலடி பிரதேசத்திலுள்ள ஒரு இனத் துவேசியால் குடிசைகள் தீக்கிரையாக்கப்பட்டும் வாள்களால் வெட்டியும் படுகாயமாகப்பட்டநிலையில் முஸ்லிங்கள் மீள்குடியேறிய பகுதிகளில் வாழ்வதற்கு அச்சம் தெரிவித்து வருகின்றனர் .

இப்பிரதேசத்தில் தமிழ் இனத்துவேசிகளுக்கு உதவியாக அரச அதிகாரிகள் கடமையாற்றி வருகின்றனர் கடந்த மாதம் ஆரயம்பதி பிரதேச செயலாளர் வாக்களார் இடாப்பில் பதிய மறுத்ததை தொடர்ந்து மண்முனை மற்றும் சிகரம் கிராமமக்கள் அடையாள வீதிப் போராட்டம் ஒன்றை நடத்தினர்.

இவ்வாறே மண்முனை சமாதான கிராமம் அமைக்கப்படும் போது அரச நிருவாகத்தால் பெரும் தடைகள் ஏற்படுத்தப்பட்டிருந்த போதிலும் இப்பிரச்சினையை புத்தி சாதூரியமாக கையாண்ட காத்தான்குடி நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் பல தடைகளையும் தாண்டி கிராமத்தை அமைத்தது அதற்கான உள்ளக வீதிகளை அமைப்பதில் ஆரயம்பதி பிரதேச செயளாளர் தடைகளை ஏற்படுத்தி வருகிறார் .

கிழக்கில் இரண்டு அமைச்சர்களும் ஒரு பாராளுமன்ற உறுப்பினர் உள்ளநிலையில் அகதிகள் குறித்து எந்த கரிசனையும் அற்ற நிலையில் நடந்து கொள்கின்றனர்.

திட்டமிடப்பட்ட நிலையில் முஸ்லிம்களின் காணிகளை மீட்பதற்கான போராட்டம் ஒன்றை யார் முன்னின்று தொடங்கிவைப்பார்கள் என்பதே மக்களின் இன்றைய கேள்வியாக உள்ளது .

கிழக்கில் அகதிகளாக்கப்பட்ட முஸ்லிம்கள் குடியேறுவதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பினர் மற்றும் அரச அதிகாரிகள் பெரும் சவால் முறியடிப்பார்களா? முஸ்லிம் அரசியல் வாதிகள்

Advertisements
This entry was posted in Sri Lanka. Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s