உருமாற்றப்பட்டுள்ள முஸ்லிம் அமைச்சர்களின் காடைத்தனமே ஓட்டமாவடி கர்த்தால்

maxresdefault (1)இலங்கையில் நல்லாட்சியை ஏற்படுத்துவதட்கான நடவடிக்கைகளை தேசிய அரசாங்கம் முன்நெடுத்துவரும் நிலையில் அதன் பங்காளிகளாக மாறி இருக்கும் முன்னாள் கிழக்கு மாகாண முஸ்லிம் அமைச்சர்களின் காடைத்தன அரசியல் இன் நொருவடிம் பெற்றிருப்பதனை நிகழ்கால சம்பவங்களிலிருந்து தெரிந்து கொள்ளமுடிகிறது .

கிழக்கின் பெரும் ஊழல் பேர்வழிகளான இவர்கள் நல்லாட்சியில் அமைச்சர்களாக வலம் வந்துகொண்டிருப்பது கிழக்கு மாகாண மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது..

நேற்றையதினம் ஓட்டமாவடியில் இடம் பெற்ற முஸ்லிம் கொங்கிரசின் கிழக்கு மாகாண முதலமைச்சர் காபீஸ் நசீர் அவர்களின் வருகையை கண்டித்து கடைஅடைப்பு (கர்த்தால்) இடம் பெற்றமையானது நல்லாட்சியின் பண்புகளை இல்லாதொழிக்கும் நடவடிக்கை என்பதை எடுத்துக் கூறுகிறது மக்களின் இயல்பு வாழ்கையை குழப்பி வழமை போன்று குளிர்காயும் தனது குள்ள நரித்தனத்தை கணகச்சிதமாக அமைச்சர் அமீரலி நிறை வேற்றினார் .

முஸ்லிம்களின் வியாபாரத்தளங்கள் முடக்கப்பட்டமையானது சீரற்ற காலநிலையால் கிழக்கில் மக்கள் பெரும் கஷ்டத்தை எதிர்நோக்கியுள்ள சூழ்நிலையில் கண்டிக்கத்தக்கதாகும் கடந்தகாலங்களில் முஸ்லிம்களை தங்களது சுயநல அரசியல் இலாபம்கருதி பிழையான வழிகளில் மக்களின் இயல்பு வாழ்கையை குழப்பியதோடு அந்நிய சமூக்கத்துடன் இருந்து வரும் நீண்டகால சகவாழ்வையும் சிதைத்தனர் .

இதேபோன்று காத்தான்குடி பிரதேசத்திலும் இராஜாங்க அமைச்சர் எம் எல் ஏ.எம் .ஹிஸ்புல்லாஹ்வின் அரசியல் அடாவடித்தனங்கள் அரங்கேரத்தொடங்கியுள்ளன நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையினால் தொடராக பெய்துவரும் மலை காரணமாக கத்தான்குடியிலுள்ள கொங்கிரீட் வீதிகள் கரைந்தோடி காணப்படுவதோடு இவரால் மேற்கொள்ளப்பட்ட ஊழல் நிறைந்த அபிவிருத்திகள் என்பதனை அனைத்து வீதிகளும் எடுத்து இயம்புகின்றன நில மட்டத்திலிருந்து இரண்டு அடிகள் வீதிகள் உயர்ந்து காணப்படுவதால் இலேசான தூரல்களிலும் மக்கள் பாதிக்கப்படுகின்றனர் இவ்வாறன சூழ்நிலைகலைக்கூட கருத்தில் கொள்ளாது அவசர அவசரமாக பழைய கட்டிடங்களுக்கும் யாரோ அடிக்கல் நாட்டிய கட்டிடங்களுக்கும் திறப்பு விழா நடத்தி வருகிறார் இதுவரை இவரால் மேற்கொள்ளப்பட்ட வீதிகள் அனைத்தும் பெரும் குண்டும் குழியுமாக காட்சி அளிக்கிறது .

எதிர்வரும் மார்ச் மாதம் மாகாணசபைத் தேர்தல் இடம் பெரும் என அரசாங்கம் அறிவித்துள்ளதால் அரசியல் வியாபாரிகளான இவர்கள் அபிவிருத்தி என்ற மாயைக்குள் சிக்குண்டுள்ள முஸ்லிம் சமூகத்தை பிழைப்பு வாத அரசியலின் ஒருபகுதியான அபிவிருத்தி நோக்கி திசைதிருப்பத் தொடங்கியுள்ளனர்
இனி மரணித்தவர்களை நலம் விசாரிக்கும் காலம்

உருமாற்றப்பட்டுள்ள முஸ்லிம் அமைச்சர்களின் காடைத்தனமே ஓட்டமாவடி கர்த்தால்

Advertisements
This entry was posted in Uncategorized. Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s