பிரபாகரனின் இளையமகன் பாலச்சந்திரன் மற்றும் சரணடைந்த விடுதலைப்புலிகள் படுகொலை செய்யப்பட்டதற்கு ராஜபக்சேவே காரணம் வெளியுறவுத்துறை அமைச்சர் மங்கள சமரவீரா

4]பிரபாகரனின் இளையமகன் பாலச்சந்திரன் மற்றும் சரணடைந்த விடுதலைப்புலிகள் படுகொலை செய்யப்பட்டதற்கு ராஜபக்சேவே காரணம் என்று இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் மங்கள சமரவீரா சூசகமாக தெரிவித்துள்ளார்.

இலங்கையில் 25 ஆண்டுகளுக்கு மேலாக நடந்து வந்த உள்நாட்டு போர், கடந்த 2009-ம் ஆண்டு முடிவுக்கு வந்தது. இந்த போர் உச்சக்கட்டம் அடைந்தபோது, பல்லாயிரக்கணக்கான அப்பாவித் தமிழ் மக்கள் கூட்டம், கூட்டமாக இனப்படுகொலை செய்யப்பட்டனர். எந்த நாடும் கண்டிராத அளவுக்கு போர்க்குற்றங்களும், மனித உரிமை மீறல்களும் நடைபெற்றன.5

இது தொடர்பாக சர்வதேச அளவில் விசாரணை நடத்தி, குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும் என்று உலகளாவிய தமிழ் மக்கள் கோரி வருகின்றனர். போர்க் குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஜெனீவாவில் நடந்த ஐ.நா. மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில், இலங்கைக்கு சாதகமாக அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம் ஒருமனதாக நிறை வேற்றப்பட்டது.

இந்த தீர்மானம், போர்க்குற்றங்கள் தொடர்பாக சர்வதேச விசாரணை நடத்த வழிவகுக்கவில்லை. அதற்கு பதிலாக காமன்வெல்த் மற்றும் வெளிநாட்டு நீதிபதிகள், சட்ட நிபுணர்கள், உள்நாட்டு நீதிபதிகள் அடங்கிய விசாரணைக் குழுவை இலங்கை அமைத்து விசாரணை நடத்த வழிவகுத்துள்ளது. இது தமிழர்களுக்கு ஏமாற்றம் அளிப்பதாக அமைந்துள்ளது. இந்த தீர்மானம் குறித்து இலங்கை நாடாளுமன்றத்தில் 2 நாள் விவாதம் நடந்தது. விவாதத்தின்போது பேசிய எதிர்க்கட்சி உறுப்பினர்கள், “ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் கொண்டு வந்து நிறைவேற்றிய தீர்மானத்தை பொறுத்தமட்டில், அமெரிக்காவிடம் இலங்கை விட்டுக்கொடுத்துவிட்டது” என்று குற்றஞ்சாட்டினர்.

இதுகுறித்து இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் மங்கள சமரவீரா கூறும்போது, ”முந்தைய ராஜபக்சே அரசு சிறந்த ராஜதந்திர வெளியுறவுக் கொள்கையை பேணவில்லை. ஐ.நா. மனித உரிமை கவுன்சில் தீர்மானத்தை எதிர்த்த முந்தைய அரசின் சார்பில் 12 நாடுகள் மட்டுமே குரல் கொடுத்தன. சீனா, ரஷ்யா, இந்தியா ஆகிய நாடுகளும் தீர்மானத்துக்கு ஆதரவு தெரிவித்தன. ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், 20-வது பத்தி மிக முக்கியமானது. இதைப்பற்றி யாரும் கூறவில்லை. ஜெனீவாவில் முன்னெடுக்கப்பட்டது இலங்கையின் நடவடிக்கை ஆகும்.

பிற நாடுகளை திருப்திப்படுத்த வேண்டிய அவசியம் நமக்கு இல்லை. வெள்ளைக் கொடியுடன் சரண் அடைய வந்தவர்கள், விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் இளையமகன் பாலச்சந்திரன் ஆகியோரை கொலை செய்யவேண்டிய அவசியம், களத்தில் இருந்த ராணுவ வீரர்களுக்கு இல்லை. ஆனால் உயர்மட்டத்தில் இருந்து பிறப்பிக்கப்பட்ட கட்டளையின்படிதான் அது நடைபெற்றுள்ளது. எனவே கட்டளையிட்டவர்களை விசாரிக்கும் வகையில் சட்டதிருத்தம் அவசியம். இதற்கான பரிந்துரையை குழு செய்துள்ளது” என்றார்.

This entry was posted in Uncategorized. Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s