இந்தியா விமானப்படையில் விமானிகளாக முதன் முறையாக பெண்கள் இணைத்துக் கொல்லப்பட்டுள்ளனர்

airகடந்த 1992-ம் ஆண்டு முதல் இந்திய விமானப்படையில் பெண்கள் சேர்க்கப்பட்டு வருகின்றனர். ஆனால் இதுவரைக்கும் பெண் பைலட்டுகள் ‘கொம்பத் ரோல்’ என்று அழைக்கப்படும் போர் விமானங்களில் பைலட்டுகளாக பறக்க அனுமதிக்கப்பட்டதில்லை.

போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்படும் பட்சத்தில், அதில் இருந்து தப்பிக்கும் பெண் பைலட்டுகள் பாலியல் ரீதியிலான துன்புறுத்தல்களுக்கு ஆளாகலாம் என்பதால் போர் விமானங்களை இயக்கும் பணிக்கு பெண் விமானிகளை நியமிப்பதில் மத்திய அரசு இத்தனை காலம் தயக்கம் காட்டி வந்தது.

இதனிடையே விமானப்படை தினத்தன்று உரையாற்றிய இந்திய விமானப்படைத் தளபதி அரூப் ஷாகா, பெண் பைலட்டுகள் போர் விமானங்களை இயக்க விரைவில் அனுமதிக்கப்படுவார்கள் என்றும், மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் அனுமதிக்காக காத்திருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், போர் விமானங்களை பெண் பைலட்டுகள் இயக்க மத்திய பாதுகாப்பு அமைச்சகம் இன்று ஒப்புதல் அளித்தது. ஹைதரபாத்தில் உள்ள விமானப்படை பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்று வரும் நடப்பு பேட்ஜ் விமானிகளில் இருந்து, இந்திய விமானப்படை போர் விமானங்களை இயக்கப் போகும் ‘கொம்பத் ரோல்’ பெண் விமானிகள் தேர்வு செய்யப்படவுள்ளனர்.

வரும் 2016-ம் ஆண்டு, ஜுன் மாதம் பெண் போர் விமானிகள், முதன் முதலாக பணிக்கு அமர்த்தப்பட உள்ளனர். இதனைத் தொடர்ந்து ஒரு வருட காலம் அவர்களுக்கு போர் விமானங்களை இயக்குவதில் நவீன வகையிலான பயிற்சி அளிக்கப்படும்.

தற்போது இந்திய விமானப்படையில் 3 ஆயிரத்து 250 பெண் விமானிகள், பல்வேறு நிலைகளில் பணியாற்றி வருகின்றனர். ஆனால் விமானப்படைக்கு சொந்தமான சரக்கு விமானங்களையும், ஹெலிகாப்டர்களையும்தான் அவர்கள் இயக்கி வந்தனர். போர் விமானங்களை இயக்கியதில்லை.

அமெரிக்கா, தலிபான்கள் மீது தாக்குதல் நடத்தியபோது ஏராளமான அமெரிக்க பெண் விமானிகள் ஆப்கானிஸ்தான் போரில் பங்கேற்றனர். அண்டை நாடான பாகிஸ்தானில் கடந்த 2006-ம் ஆண்டு முதலே பெண் விமானிகள் போர் விமானங்களை இயக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர

This entry was posted in Uncategorized. Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s