வாஷிங்டன் : 2025ம் ஆண்டில் உலகின் மிகப்பெரிய அணுசக்தி நாடுகளில் பாகிஸ்தான் 5வது இடத்தை பிடிக்கும்

வாஷிங்டன் : 2025ம் ஆண்டில் உலகின் மிகப்பெரிய அணுசக்தி நாடுகளில் பாகிஸ்தான் 5வது இடத்தை பிடிக்கும் என அமெரிக்க அணுசக்தி விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. பாக்., பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் அமெரிக்க வருகையை முன்னிட்டு இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

அமெரிக்கா-பாகிஸ்தான் இடையேயான வர்த்தக கவுன்சில் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக பாக்., பிரதமர் நவாஸ் ஷெரீப் அமெரிக்கா சென்றுள்ளார். இதனை முன்னிட்டு பாக்., அணுசக்தி 2015 என்ற தலைப்பில் அமெரிக்க அணுசக்தி விஞ்ஞானிகள் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர், அந்த அறிக்கையில், பாகிஸ்தான் வளர்ச்சிக்காக பல திட்டங்களை தீட்டி வருகிறது. 4 புளோட்டோனிய கருவிகள் மற்றும் யுரேனிய வசதிகளை உற்பத்தி செய்துள்ளது. இதே நிலை தொடர்நாதால் அடுத்த 10 ஆண்டுகளில் பாக்., மிகப் பெரிய சக்தியாக உருவெடுக்கும்.

2011ம் ஆண்டு பாக்., இடம் 90 முதல் 110 அணுஆயுதங்கள் இருந்தன. இது இப்போது 110 முதல் 130 ஆக அதிகரித்துள்ளது. 2025 ல் இது 220 முதல் 250 வரையிலான அணுஆயுதங்களை பாக்., கொண்டிருக்கும். இது உலகின் அணுசக்தி நிறைந்த 5வது நாடாது மிகப் பெரிய நாடாக பாக்.,ஐ மாற்றும். இதுவரை 6 வகையான அணுசக்தி திறன் கொண்ட ஏவுகணைகளை பாக்., வைத்துள்ளது. மேலும் 2 தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கடந்த 20 ஆண்டுகளில் பாக்.,ன் செயல்பாடு மற்றும் இப்போதைய தற்காப்பு ஆயுத வளர்ச்சி ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மேலும் பாக்., அணுஆயுத தயாரிப்பை தொடர்ந்து மேற்கொண்டு வருவதையும் இந்த அறிக்கை உறுதிப்படுத்தி உள்ளது

This entry was posted in Uncategorized. Bookmark the permalink.

Leave a comment