காத்தான்குடியிலுள்ள பஸ்மலா சதுக்கத்தில்கொள்கைவிளக்கக் கூட்டம் ஒன்றை நடத்துவதற்கு பிரதேசசபையிடம் முறையாக எழுத்துமூல அனுமதியை பெற்றிருந்தது போதிலும் காத்தான்குடி நகரசபைச்செயளாலர் நடத்துவதற்கான தடை உத்தரவு கடிதம் ஒன்றினையும் அனுப்பி வைத்துள்ளார்.
இதனை விரிவாக ஆலோசித்த ஜமாஅத் உறுப்பினர்கள் காராணத்தை நேரடியாக கேட்டறிவதென தீர்மானித்து இன்றையதினம் செயளாலரை அவரது காரியாலயத்தில் நேரடியாக சந்தித்து தடை தொடர்பாக வினவியது விளக்கமளித்த செயளாலர் இக் கொள்கை விளக்கக் கூட்டம் காத்தான்குடியின் முன்னாள் உதவி தவிசாளர் ஜெசீம் என்பவரால் தமக்கு இக்கூட்டம் இடைஞ்சலாகவும் பெரியாரை நிந்தனை செய்யும் கூட்டமாக இருக்கலாம் என்பதால் தடைசெய்யக் கோரி அவரால் அனுப்பிய கடடிதம் ஒன்றை ஜமாஅத் உறுப்பினர்களிடம் காண்பித்தார் இதனைப் பார்த்த அவர்கள் இக்கடிதத்தினை வைத்து எவ்வாறு சட்டரீதியாக எமது கூட்டத்தை தடை செய்யமுடியும் என கேள்வி எழுப்பினர்.
எதனையும் பொறுப்பில் எடுக்காத செயளாலர் மீண்டும் தடைகோரிய கடிதம் ஒன்றினை தயார் செயுமாறு உதவியாளர்களிடம் உத்தரவிட்டார் மீண்டும் இருசாருக்கும் விவாதம் ஆரம்பிக்க தனது பிழையை உணர்ந்து கொண்ட அவர் இன்று மாலை இதுதொடர்பாக கலந்தாலோசித்து முடிவை அறிவிப்பதாக தெரிவித்தார் .
இதனை ஏற்றுக் கொண்ட ஜமாஅத் உறுப்பினர்கள் மாகணசபை உறுப்பினர் சிப்லி பாரூக்கை தொடர்பு கொண்டு அவரூடாக முதலமைச்சரோடு தொடர்பை ஏற்படுத்தி அதிகார துஷ்பிரயோகம் குறித்து விரிவாக விளக்கிக் கூறினர் சிலமணி நேரங்களுக்குப் பின்னர் நிருவாகஉறுப்பினருடன் தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தியநகரசபைச் செயளாலர் அனுமதிக்கான கடிதத்தினை வழங்குவதாக தெரிவித்தார்
காத்தான்குடி மக்கள் குறித்து பிளையான கண்ணோட்டதினையே தமிழ் உயர் அதிகாரிகள் ,அரசியல் வாதிகள் ,பொலிசார் கொண்டுள்ளனர் என்பதற்கு இது ஒரு சிறு உதாரணமாகும் இந்நகரத்தில் வாழும் மக்கள் இலஞ்சம் வழங்கியாவது தங்களது காரியங்ககளை இலகுவாக முடித்துக்கொள்ளும் மனநிளையையே கொண்டுள்ளனர் .
இதனை தெளிவாகப் புரிந்து கொண்டுள்ள அரச உயர் அதிகாரிகள் அரசியல் வாதிகள் பொலிசார் உலமாக்கள் அதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்வதோடு அதிகார துஸ்பிரயோகம் ஊழல் என்பவற்றை வெளிப்படியாக செய்துவிட்டு தப்பிக்கொள்ளும் சூழ்நிலை காணப்படுகிறது.
காத்தான்குடியில் பலவருடங்களாக இந்துத்துவ கொள்கை போதகராகவும் அதன் கலை கலாச்சாரங்களை முஸ்லிமென்ற பெயரில் நடத்திவரும் அப்துர் ரௌஊப் என்பவரின் சீடரான ஜெஸ்மின் முன்னாள் நகரசபை உதவி தவிசாளரும் நகரசபை ஊழல்களில் நேரடி பங்கு கொண்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
இப்பிரதேசத்திலுள்ள அனைத்து நிருவாகங்களும் அரசியல்வாதிகளின் காலடியில் மண்டி இட்டு கிடப்பதுவே இவ்வாறான சீர்கேட்டுக்கு காரணம் இனிமேலாவது மக்களை விழிப்புனர்வூட்டும் நடவடிக்கைகளை இஸ்லாமிய இயக்கங்கள் மேற்கொள்ளவேண்டும்