தற்கொலை செய்துகொள்ள அனுமதி கேட்கும் 200 ஊர்க்காவல் படை வீரர்கள்

ராஜஸ்தான் மாநிலத்தில் பணியாற்றும் சுமார் 200 ஊர்க்காவல் படை வீரர்கள், தங்களின் நீண்டகால கோரிக்கையை அரசு நிறைவேற்றாததால் தற்கொலை செய்து கொள்ள அனுமதி கேட்டு கடிதம் எழுதியுள்ளனர்.

இதுகுறித்து ஊர்க்காவல் படை வீரர்கள் சங்கத்தின் மாநில தலைவர் ரத்தோர் கூறியதாவது:-

பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்ற நீண்ட கால கோரிக்கை தொடர்பாக 199 ஊர்க்காவல் படை வீரர்கள் ரத்தத்தில் கையெழுத்திட்ட கடிதங்களை பிரதமர் மற்றும் ராஜஸ்தான் முதலமைச்சருக்கு கடிதம் அனுப்பியுள்ளனர். அதில், தங்களை பணி நிரந்தரம் செய்யாததால் தற்கொலை செய்துகொள்ள அனுமதி கேட்டுள்ளனர்.

ஸ்டிரைக், தேர்தல், வெள்ளம் மற்றும் சட்டம் ஒழுங்கு தொடர்பான பிரச்சினைகள் உள்ளிட்ட அவசர காலங்களில் ஊர்க்காவல் படையினர் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். ஆனால், அவர்களை மத்திய அரசோ, மாநில அரசோ நிரந்தர ஊழியர்கள் ஆக்கவில்லை. இதுதொடர்பாக ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தில் சமீபத்தில் சங்கம் சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று மனித உரிமை ஆணையமும் அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. ஆனால், கடந்த 6 மாதமாக பா.ஜனதா அரசு எதையும் செய்யவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

இதுபற்றி ஊர்க்காவல் படையின் கமாண்டர் சங்ராம் சிங்கை தொடர்பு கொண்டு கேட்டபோது, “ஊர்காவல் படை வீரர் பணி என்பது தன்னார்வ சேவை. பணி நிரந்தரம் கோர அவர்களுக்கு உரிமை இல்லை. அதனை கோர்ட் நிராகரித்துள்ளது” என்றார்.

Advertisements
This entry was posted in Uncategorized. Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s