சிரியா அகதிகளுக்கு அடைக்கலம் தர புதிய தீவை வாங்கும் எகிப்து கோடீசுவரர்

உள்நாட்டு போர் நடைபெறும் சிரியாவில் இருந்து மக்கள் அகதிகளாக வெளியேறி ஐரோப்பிய நாடுகளுக்கு செல்கிறார்கள். அவர்களை ஏற்க சில நாடுகள் மறுத்து வருகின்றன.

மத்திய தரைக்கடலில் செல்லும் போது படகுகள் கடலில் மூழ்கி ஏராளமான அகதிகள் மரணம் அடை கின்றனர். ஹங்கேரியில் இருந்து மற்ற நாடுகளுக்கு செல்லவிடாமல் அகதிகள் தடுத்து நிறுத்தப்பட்டனர். சிரியா அகதிகளுக்கு இது போன்று பல்வேறு பிரச்சினைகள் எழுகின்றன.

எனவே, அவர்களுக்கு நிம்மதியான மகிழ்ச்சிகரமான வாழ்வை அமைத்து கொடுக்க எகிப்து கோடிசுவரர் ஒருவர் முன் வந்துள்ளார். கிரீஸ் அல்லது இத்தாலியில் ஒரு தீவை விலைக்கு வாங்கி அதில் சிரியா அகதிகளை குடியேற்ற திட்டமிட்டுள்ளார்.

இதுகுறித்து டுவிட்டர் இணையதளத்தில் மனம் திறந்துள்ளார். தான் விலைக்கு வாங்கும் அந்த தீவில் அகதிகள் தங்க வீடுகள் மற்றும் வேலை வாய்ப்பை உருவாக்கி தரவும் முடிவு செய்துள்ளார். இது ‘ஜோக்’ அல்ல. அல்லல்படும் அந்த மக்களுக்கு தான் மனமுவந்து இந்த உதவி செய்ய தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

இதற்காக கிரீஸ் அல்லது இத்தாலி நாடுகள் தனக்கு ஒரு தீவை விலைக்கு விற்கும்படி கேட்டுக் கொண்டுள்ளார்.

Advertisements
This entry was posted in Uncategorized. Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s