வாய்க் கொழுப்பு

எம் எச் எம் கபூர்
ஊர் வீதி காத்தான்குடி

நடந்து முடிந்த இலங்கையின் எட்டாவது பாராளுமன்றதிற்கான மக்கள் பிரதி நிதிகளை தெரிவு செய்வதற்காக இடம் பெற்ற தேர்தலில் மட்டகளப்பு மாவட்டத்தில் ஐக்கிய சுதந்திர கூட்டமைப்பு சார்பாக முதன்மை வேட்பாளராக போட்டியிட்ட எம் எல் ,ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வின் பிரச்சார மேடைகளில் பேச்சாளர்களாக களமிறங்கிய சில ஆதரவாளர்கள் காத்தான்குடி பிரதேசத்தை ஆயுதம் தூக்கி பாதுகாத்தோம் இனிவரும் காலங்களிலும் ஆயுதங்களை கையில் எடுக்க தயங்கப் போவதில்லை என்றும் பிரச்சார மேடைகளில் முழங்கி வந்தனர்.

இலங்கையிலுள்ள சில இனவாதிகளும் இந்திய புலனாய்வுத்துரையினரும்இலங்கை முஸ்லீம்கள் இராணுவ மயமாக்கப் படக் கூடிய ஆபத்துக்கள் இருப்பதாக தெரிவித்துவருகின்றனர்,

முஸ்லீம்கள் வாழும் அனைத்துப் பிரதேசங்களிலும் ஐஸ் .ஐஸ் தொடர்பான விசாரணைகளை  புலனாய்வுதுறையினர் மேற்கொண்டு வரும் சூழலில் தேர்தல் இலாபங்களுக்காக இளைஞ்சர்களை படுகுழியில் தள்ளும் இவ்வாறான பிரச்சாரங்கள் கண்டிக்கப்படவேண்டியவையாகும் காத்தான்குடியை நோக்கி பல அபாயங்கள் காத்திருப்பதாகவே தோன்றுகிறது

கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்னர் இளைஞ்சர்கள் பொலிசாரினால் குறிவைக்கப்பட்டு பெரும் துன்பத்தை சந்தித்தமை யாரும் மறந்திருக்கமுடியாது.

மீண்டும் பொலிசார் இளைஞ்சர்கள் தொடர்பான தகவல்களை பெற்றுவருவதாகவும் ஆயுதங்களுடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிகப்படுபவர்கள் விசாரணைக்காக அழைக்கப் படலாம் என தெரிவிக்கபடுகிறது

கிழக்கில் புலிகளின் அச்சுறுத்தல் நிலவிய காலப்பகுதிகளில் ஊரை பாதுகாப்பதட்காக முன்வந்த இளைஞ்சர்கள் மிகவும் கஷ்டமான சூழ்நிலையில் புலனாய்வுப் பிவினர்களின் தொல்லைகளுக்கும் மத்தில் வாழ்கையை நடத்திவருகின்றனர் .

இவ்வாறான அறிவிலிகளின் மேடைப் பேச்சுக்களால் உண்மையில் சமூகத்திற்காக உழைத்த சகோதரர்கள் மீண்டும் மீண்டும் பிரச்சினைகளுக்கும் வீணான தொல்லைகளுக்கும் முகம்கொடுக்க வேண்டி ஏற்படலாம் என அஞ்சப் படுகிறது

அப்பாவி இளைஞ்சர்களை பொலிசார் விசாரணை என்ற போர்வையில் கைது செய்யவும் வாய்ப்புகள் உள்ளன எமது இளைஞ்சர்களை பாதுகாக்க வேண்டி பொறுப்பில் ஒவ்வொருத்தரும் கவனம் செலுத்த வேண்டும்

இனிமேலும் இவ்வாறான மேடைபேச்சுக்களை எதிர்வரும் காலங்களில் தவிர்த்துக்கொள்ளுமாறு சம்மேளனமும் ஜமீயத்துல் உலமாவும் குறிப்பிட்ட அரசியல்வாதிகளை அறிவுறுத்தவேண்டும்.

Advertisements
This entry was posted in Uncategorized. Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s