கிழக்கின் அத்வைத மத்திய நிலையம் ஹிஸ்புல்லாவினால் திறந்து வைப்பு!

rauf-300x232

கிழக்கிலங்கையில் அத்வைத (எல்லாம் இறைவனே) கொள்கையின் பிறப்பிடமான
காத்தான்குடி பத்ரியா தைக்கா பள்ளிவாயலின் புதிய கட்டடத்தை பொருளாதார
அபிவிருத்தி பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் கடந்த வாரம் திறந்து
வைத்துள்ளார். இந்த வைபவம் மிகவும் மறைமுகமாக எந்தப் ஊடகவியலாளர்களும்
அழைக்கப்படாமல் ஆராவாரமின்ரி நடாத்தப்பட்டு இருக்கிறது.

”தௌஹீத்” அமைப்புகளுக்கு தலையையும் ”ஹுப்பு” அமைப்புகளுக்கு வாலையும்
காட்டும் பிரதியமைச்சரின் வேண்டுகோளின் பேரிலேயே இந்த ஏற்பாடு ஆராவாரம்
இல்லாமல் அமைதியாக நடந்து முடிந்திருக்கிறது.

தைக்கியா பள்ளிவாயலான பத்திரியா பள்ளிவாயல் அகில இலங்கை ஜம்மியத்துல்
உலமா சபையின் அங்கீகாரம் இல்லாமல் வாக்குகளுக்காக சில அரசியல்வாதிகளின்
அங்கீகாரத்துடன் ஜும்மாஹ் பள்ளிவாயலாக இயங்க சகல் ஏற்பாடுகளும்
செய்யப்பட்டு வருகிறது.

”முர்தத்” என அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபையினால் பத்வா
வழங்கப்பட்ட மௌலவி அப்துர் ரவூப் (மிஸ்பாஹி) என்பவரே இப்பள்ளிவாயலின்
தலைமை நிருவாகியாக செயற்பட்டு வருகிறார். ”ஹமவோஸ்த்” (எல்லாம் இறைவனே)
என்ற கொள்கையை இவர் பகிரங்கமாக கூறி மக்களை வழி கெடுத்த காரணத்தினாலேயே
எகிப்தில் உள்ள உலகப் புகழ் பெற்ற அல்-அஸ்ஹர் பல்கலைக்கழகத்தினால்
”முர்த்த” (மதம் மாறியவர்) என பத்வா வழங்கப்பட்டு அகில இலங்கை
ஜம்மியத்துல் உலமா சபையினால் பகிரங்கமாக அறிவிக்கப்பட்டது. இவர் கஞ்சா
என்ற போதைப்பொருளுக்கு அடிமைப்பட்டவர் என்பதும் இப்பள்ளிவாயலில் கஞ்சா
பரிமாறப்படுவதும் குறிப்பிடத்தக்கது.

அப்துர் ரவூப் மௌலவி பக்கமுள்ள 1850 வாக்குகளுக்காகவே அமைச்சர் பஷீர்
சேகு தாவூத், மாகாண சபை உறுப்பினர் ஆசாத் சாலி, ஹிஸ்புல்லாஹ் போன்றவர்கள்
காலத்துக்கு காலம் இவருக்கு சில சலுகைகள் செய்து இஸ்லாத்துக்கு விரோதமான
கொள்கையை வாழ வழி செய்துள்ளனர். அண்மையில் இப்பள்ளிவாயலுக்கு அமைச்சர்
மேர்வின் சில்வா அவர்களும் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் வேண்டுகோளின்
பிரகாரம் விஜயம் செய்தமை குறிப்பிடத்தக்கது.

அப்துர் ரவூப் மௌலவி மரணமாவதற்கு முன் இங்கு குத்பா பிரசங்கம் நிகழ்த்த
வேண்டும் என்ற அவரின் முஹிபியீன்கலின் வேண்டுகோளின் பெயரில்
அப்பள்ளிவாயல் கட்டட வேலைகள் பூரணமாவதற்கு முன் அவசரமாக பிரதியமைச்சர்
அவர்களால் திறந்து வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இங்கு
குத்பா ஆரம்பிக்கப்பட்டால் வஹ்ததுல் வுஜூத் எனும் இஸ்லாத்துக்கு எதிரான
கொள்கைகள் பகிரங்கமாக பிரச்சாரம் செய்யப்படும் என காத்தான்குடியில் உள்ள
தௌஹீத் அமைப்புக்கள் கவலை வெளியிட்டுள்ளன, ஹிஸ்புல்லாஹ்வுக்கான ஆதரவும்
கணிசமான அளவு வீழ்ச்சி அடையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஹிஸ்புல்லாஹ்வின் அரசியல் ஆதரவாளர்களான சில கொள்கையற்ற உலமாக்களும் இந்த
நடவடிக்கைகளுக்கு ஆதரவளிப்பது மிகவும் வேதனைக்குரிய செயலாகும் என உள்ளூர்
தௌஹீத் அமைப்புக்கள் தெரிவிக்கின்றன.

மார்க்கத்தை விற்று சுயநல அரசியல் செய்ய வேண்டாம் எனவும் இஸ்லாத்தின்
பெயரால் அத்வைத கொள்கையை ஊருக்குள் பரப்ப முனைய வேண்டாம் எனவும்
”புழுதி” இணையதளம் சம்பந்தப்பட்டவர்களை வேண்டிக் கொள்கிறது.

Advertisements
This entry was posted in Uncategorized. Bookmark the permalink.

3 Responses to கிழக்கின் அத்வைத மத்திய நிலையம் ஹிஸ்புல்லாவினால் திறந்து வைப்பு!

  1. Hiraz says:

    What a action mervin…nice picture

  2. ஹிஸ்புஸ்ஷைத்தான் இவன் ஒரு வடிகட்டிய முனாபிக் .. பணத்திற்கும் பதவிக்கும் எந்த கேவலத்தையும் செய்வான் ..

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s