அரையமைச்சர் ஹிஸ்புல்லாவின் மகன் காமக்கூத்து நடாத்தியது பொய்யாம் -ஏறாவூர் ஜாபிர் முறைப்பாடு! பொலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்! – பிரதம ஆசிரியர் பதில் வாக்கு மூலம்!!

563973_10151575950117062_886098908_n“அரையமைச்சர் ஹிஸ்புல்லாவின் மகன் ஹிராஸ் அகமட் வெளிநாட்டுப் பெண்களுடன் உல்லாசம்’ என்ற தலைப்பில் கடந்த வாரம் வெளியான ‘வார உரைகல்’ பத்திரிகையில் பிரசுரமான செய்தி தொடர்பில் ஏறாவூர் 03. பழைய சந்தை வீதியில் வசிக்கும் அலி முகமது மொஹமட் ஜாபிர் என்பவர் கடந்த 19ம் திகதி ‘வார உரைகல்’ பிரதம ஆசியர் புவி . றஹ்மதுழ்ழாஹ்வுக்கு எதிராக முறைப்பாடு ஒன்றைச் செய்துள்ளார்.

காத்தான்குடி பொலிஸ் நிலைய சிறு குற்றப்பிரிவு MOIB முறைப்பாட்டுப் பதிவுப் புத்தகத்தில் 160ம் இலக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள அவரது முறைப்பாட்டில்…. கடந்த 18ம் திகதி பொலன்னறுவையில் பஸ் ஒன்றினுள்  இருந்ததாகவும், அப்போது ‘வார உரைகல்’  பத்திரிகை விற்பதற்காக ‘புவி’ வந்தபோது நூறு ரூபாவைக் கொடுத்து பத்திரிகையொன்றை அவரிடமிருந்து வாங்கியதாகவும், மீதிப்பணத்தையும் அவர் தரவில்லையெனவும், அப்பத்திரிகையில் பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாவின் மகன் ஹிராஸ் அகமட்டின் படங்களையும், செய்தியையும் அவர் பிரசுரித்துள்ளதாகவும், பிரதியமைச்சரின் மகன் ஹிராஸ் அகமட் லண்டனில் படித்துக் கொண்டிருப்பதாகவும், தனிப்பட்ட கோபமாகவும் அரசியல் இலாபம் கருதியும் இச்செய்தியை அவர் பிரசுரித்துள்ளதாகவும், இச்செய்தி பொய்யானது என அவர் ‘வார உரைகல்’ பத்திரிகையில் மீண்டும் பிரசுரிக்க வேண்டும்எனவும் தெரிவித்துள்ளார்.

இம்முறைப்பாட்டுக்கு ‘வார உரைகல்’ பிரதம ஆசிரியர் 20.10.2013ல் வாக்குமூலம் அளிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

நான் எட்டு வருடங்களாக அரசாங்க அனுமதி பெற்று ஒரு பதிவு செய்யப்பட்ட பத்திரிகையாக ‘வார உரைகல்’ பத்திரிகையை வெளியிட்டு வருகிறேன். முறைப்பாடு செய்திருக்கும் நபரைத் தனக்கு தெரியாது. கடந்த 16ம் திகதி ‘புழுதி’என்ற இணையதளத்தில் வெளிவந்து உலகம் முழுவதும் பார்த்தறியப்பட்ட ஒரு புதினச் செய்தியையும், படங்களையுமே நான் 18ம் திகதி வெளியான எனது ‘வார உரைகல்’ புதினப்பத்திரிகையில் மறுபதிப்பாக வெளியிட்டுள்ளேன்.

கடந்த 18ம் திகதி வெள்ளிக்கிழமை நான பொலன்னறுவைக்கு பத்திரிகை விற்பதற்காகச் செல்லவில்லை. எந்தவொரு பஸ்ஸிலும் அன்றைய தினம் நான் பத்திரிகை விற்பனை செய்யவில்லை. வெள்ளிக்கிழமை காலை காத்தான்குடி ஜாமியுழ்ழாபிரீன் மார்க்கட்டிலும், காத்தான்குடியிலும்தான் நான் குறித்த பத்திரிகையை விற்றேன். இதில் குறிப்பிடப்பட்ட மேற்படி செய்தி பொய்யான செய்தி என்பதை முறைப்பாட்டுக்காரர் நீதிமன்றத்தில் நிரூபித்தால் நீதிமன்றின் கட்டளைக்கமைய அச்செய்தி பொய்யானது என்பதைப் பிரசுரிக்க ஆயத்தமாகவுள்ளேன். இம்முறைப்பாடு தொடர்பாக பொலீசார் உரிய நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

இம்முறைப்பாடு தொடர்பில் காத்தான்குடி பொலீசாரின் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பதை ‘வார உரைகல்’ எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றது.

அரையமைச்சர் ஹிஸ்புல்லா இக்காத்தான்குடி மண்ணின் கண்ணே பிறந்து வளர்ந்து இன்று அரசியலில் ஆளுந்தரப்பு பிரதிநிதியாக சகலவிதமான  அரசியல் அதிகாரங்களுடனும் கோலோச்சுகின்ற ஒரு மைந்தன். அவர் திருமணம் செய்திருப்பதும் இவ்வூரைச் சேர்ந்த ஒரு கௌரவமான குடும்பத்தைச் சேர்ந்த முஸ்லிம் பெண்ணைத்தான்.

அவர்கள் இருவருக்கும் பிறந்த உத்தம புத்திரன்தான் ‘புழுதி’ இணையதளச் செய்தியின் மூலம் ஹாங்காங் நாட்டுப் பெண்ணுடன் உல்லாசமாக இருப்பதாக உலகம் முழுக்க பார்த்தறியப்பட்ட ஹிராஸ் அகமட்.

இவர் சம்பந்தப்பட்ட செய்தியையும், படங்களையும் ‘வார உரைகல்’ கடந்த 277வது பதிவில் இடம்பெறச் செய்து 17ம் திகதி வியாழக்கிழமை மாலை காத்தான்குடி பிரதான வீதியிலும், 18ம் திகதி வெள்ளிக்கிழமை காலையில் காத்தான்குடி ஜாமியுழ்ழாபிரீன் சந்தையிலும், உள்ளுர் பத்திரிகை விற்பனை நிலையங்களிலும், அன்றைய தினம் மாலையில் காத்தான்குடி கடற்கரையில் கூடியிருந்த பல்லாயிரம் மக்கள் மத்தியிலும் சந்தைப்படுத்தப்பட்டதை உள்ளுர் வாசகர்கள் நன்கறிவார்கள்.

இக்காலப்பகுதியில் செய்தியில் சம்பந்தப்பட்ட அரையமைச்சர் ஹிஸ்புல்லாவும் காத்தான்குடியிலேதான் தங்கியிருந்தார்.

ஹஜ்ஜுப் பெருநாளைக் கொண்டாடுவதற்காக கொழும்பு போன்ற இடங்களில் வசிக்கும் அவரதும், அவரது மனைவியினதும் உறவினர்களும் காத்தான்குடிக்கு வந்திருந்தனர்.

18ம் திகதி வெள்ளிக்கிழமை கடற்கரையில் பத்திரிகை விற்பனை செய்தபோது ஒரு பெண் ‘எங்கட மச்சிட மகன்ட செய்தி போட்ட பேப்பரா?’ என்று கேட்டு வாங்குமளவுக்கு அரையமைச்சர் ஹிஸ்புல்லாவின் உறவினர்களும்கூட ‘வார உரைகல்’ பிரதம ஆசிரியரிடம் 40 ரூபாய் கொடுத்து பத்திரிகைகளை வாங்கியதை இவ்விடத்தில் குறிப்பிட்டாக வேண்டும்.

இந்நிலையில் குறித்த செய்தியால் எள்ளவும் கவலைப்படாத அரையமைச்சரினதும், அவரது மனைவியினதும் உற்றார் உறவினர்களும், நண்பர்கள் ஆதரவாளர்களும் நிறைந்திருக்கும் இக்காத்தான்குடியிலிருந்து ஒருவர் கூட காத்தான்குடிப் பொலிஸ் நிலையத்திற்குச் சென்று இது பொய்ச் செய்தி எனப் புகார் தெரிவிக்கவில்லை.

அரையமைச்சர் ஹிஸ்புல்லா கூட தனது மானம் போக்கடிக்கப்பட்டுள்ளது, தனது மகனுடைய மரியாதை போக்கடிக்கப்பட்டுள்ளது என்று மூச்சு விடவில்லை.

அவ்வாறெல்லாம் உள்ளுரில் நிலைமை இருக்க, ஏறாவூரிலிருந்து இந்த மைந்தனின் மானம் காக்க இது பொய்ச் செய்தியென ‘வார உரைகல்’ செய்தி வெளியிட வேண்டுமெனக் கேட்டிருக்கின்றார் முறைப்பாட்டாளர்.

இவ்வாறு அவர் கேட்டிருப்பது கூட பொய்யான தகவல்களைக் கூறியே என்பதை எமது வாசகர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

‘வார உரைகல்’ பத்திரிகையை உள்ளுரிலேயே பஸ்களில் ஏறி விற்பனை செய்யும் வழக்கம் இல்லாத பிரதம ஆசிரியரை பொலன்னறுவையில் பஸ்ஸில் வைத்து பத்திரிகை வாங்கியதாக முதலிலேயே பெரும் பொய்யொன்றைச் சொல்லித்ததான அவர் இம்முறைப்பாட்டைச் செய்துள்ளார்.

எனவே, பொய்யில் இறைவனின் அருள் இருக்காது என்பதை நன்குணர்ந்துள்ள ‘வார உரைகல்’ பிரதம ஆசிரியர், இம்முறைப்பாட்டை கிடப்பில் போட்டுவிடாது உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென தனது பதில் வாக்கு மூலத்தில் காத்தான்குடிப் பொலீசாரைக் கேட்டுக் கொண்டுள்ளார்.nanari vaara uraikal

Advertisements
This entry was posted in Uncategorized. Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s