முஸ்லிம்களின் காணிகளை அபகரித்துள்ள ஆரயம்பதி தமிழர்கள் பொய்யான குற்றச்சாட்டுக்களை முன் வைத்து ஆர்ப்பாட்டம்

D154011410மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனைப்பற்று பிரதேச செயலகத்துக்குட்பட்ட ஆரையம்பதி பிரதேசத்தில் தமது அரச காணிகள் மற்றும் பொதுமயானம் என்பனவை திட்டமிட்ட வகையில் அபகரிக்கப்படுவதாகவும் அதனை உடனடியாக தடுக்குமாறு வலியுறுத்தியும் ஆரையம்பதி பிரதேச மக்களினால் மட்டக்களப்பு மாவட்ட செயலக வாயில் கதவு அடைக்கப்பட்டு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது.

இன்று திங்கட்கிழமை மாவட்ட செயலகத்தில் மாவட்ட அபிவிருத்திக்குழுக்கூட்டம் நடைபெறவிருந்த நிலையில் மாவட்ட செயலகத்துக்கு முன்பாக பெருமளவான பொதுமக்கள் வாயில்கதவினை மூடி யாரும் வெளியில் உள்ளுக்குள் நுழையாதவாறு அமர்ந்து இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.;

சுமார் 20ஆயிரம் பொதுமக்கள் பயன்படுத்தும் காணிகள் சட்ட விரோதமான முறையில் உறுதிகள் முடிக்கப்பட்டு அபகரிக்கப்பட்டுள்ளதாகவும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டோர் தெரிவித்தனர்.

காத்தான்குடி நகரசபையின் முதல்வர் அஸ்பர் தனது உறவினர்களின் பெயரில் அதிகளவான காணிகளை இப்பகுதியில் திட்டமிட்ட வகையில் சுவிகரித்துள்ளதாகவும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டோர் தெரிவித்தனர்.

தமக்குள்ள அரசியல் செல்வாக்கினை பயன்படுத்தி ஆரையம்பதி பிரதேசத்தில் உள்ள பொதுமயானம் மற்றும் அரச காணிகளை அபகரித்துள்ளதாகவும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

ஆரயம்பதி பிரதேசத்திலுள்ள முஸ்லிம்களின் காணிகளை இயக்கங்களின் அதிகாரத்தினை பயன்படுத்தி கோவில்கள் மற்றும் மாயணங்களை அமைத்துள்ள ஆரயம்பதி பிரதேச தமிழர்கள் பொய்யான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து இனங்களுக்கிடையிலான பிளவுகளை மேற்கொள்ள ஆரயம்பதி உள்ளூர் அரசியல் வாதிகள் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர் .
.

This entry was posted in Uncategorized. Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s