இலங்கையின் வடமாகாண முதலமைச்சராக தேர்வுசெய்யப்பட்டுள்ள சி.வி.விக்னேஸ்வரன் அக்டோபர் மாதம் 7 ஆம் தேதி ஜனாதிபதி முன்னிலையில் அலரிமாளிகையில் சத்தியப்பிரமாணம்

download (4)இலங்கையின் வடமாகாண முதலமைச்சராக தேர்வுசெய்யப்பட்டுள்ள சி.வி.விக்னேஸ்வரன் அக்டோபர் மாதம் 7 ஆம் தேதி ஜனாதிபதி முன்னிலையில் அலரிமாளிகையில் சத்தியப்பிரமாணம் செய்து கொள்வார் என்று அறிவிக்கப்பட்டிருக்கின்றது. தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தனுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் வெள்ளிக்கிழமையன்று காலை இடம்பெற்ற சந்திப்பையடுத்து இந்த அறிவிப்பு வந்திருக்கிறது.

ஜனாதிபதியுடனான தனது சந்திப்பின்போது முக்கிய விடயங்கள் பற்றி நாட்டின் ஜனாதிபதி என்ற வகையில் பேசப்பட்டதாக தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் செய்தியாளர்களிடம் கூறினார்.

இது தொடர்பாகத் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய சுரேஸ் பிரேமச்சந்திரனிடம் கேட்டபோது, ஜனாதிபதியைச் சந்தித்துவிட்டு வந்ததன் பின்னர் நடைபெற்ற கட்சித் தலைவர்களுடனான கூட்டத்தில் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டதாகக் கூறினார்.

அத்துடன் வருகின்ற 11 ஆம் தேதி வடமாகாண சபையின் அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்கள் யாழ்ப்பாணத்தில் கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் மற்றும் முதலமைச்சர் விக்னேஸ்வரன் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொள்வார்கள் என்றும் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

ஜனாதிபதி முன்னிலையில் வடமாகாண முதல்வர் சத்தியப் பிரமாணம் செய்து கொள்வதில் கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சிகளிடையே கருத்து வேற்றுமை நிலவுகின்ற நிலையில் இந்த அறிவித்தல் வெளியாகியிருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில் வடமாகாண அமைச்சரவை தொடர்பில் இரண்டாவது நாளாகக் கூடிய கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் முடிவெடுக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நான்கு அமைச்சுக்களைக் கொண்ட மாகாண சபையின் அமைச்சரவைக்கு அமைச்சர்களை நியமிப்பது தொடர்பில் கட்சித் தலைவர்களிடையே பலதரப்பட்ட கருத்துக்கள் பரிமாறப்பட்டு விவாதிக்கப்பட்டுள்ள போதிலும், முடிவு எதனையும் எட்டப்படவில்லை.

இதுபற்றி நாளை கட்சித் தலைவர்கள் கூடிப் பேசி இறுதி முடிவெடுப்பார்கள் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

This entry was posted in Sri Lanka. Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s