ஹிராநகர் பகுதியில் போலீஸ் ஸ்டேஷன் ஒன்றில் ராணுவ உடையில் நுழைந்தபோராளிகள் நடத்திய தாக்குதலில் 6 பலி

Tamil_News_large_813145 காஷ்மீரின், ஹிராநகர் பகுதியில் போலீஸ் ஸ்டேஷன் ஒன்றில் ராணுவ உடையில் நுழைந்த போராளிகள்  நடத்திய தாக்குதலில் 6 போலீசார் உள்பட 12 பேர் பலியாகி உள்ளனர். இந்த தாக்குதலில் பொது மக்கள் ஒருவரும் பலியாகி உள்ளனர். 

காஷ்மீரின் கத்துகா மாவட்டத்தில் உள்ளது ஹிராநகர். இங்குள்ள போலீஸ் ஸ்டேஷன் ஒன்றில் இன்று அதிகாலை அதிரடியாக நுழைந்த போராளிகள் , சரமாரியாக துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தி உள்ளனர். இதில் அங்கிருந்த 6 போலீசார் ராணுவ வீரர்கள் உட்பட 12பேர் பலியாகினர். இதில் பொது மக்கள் ஒருவரும் பலியாகி உள்ளனர். இந்த தாக்குதலில் மேலும் பலர் படுகாயம் அடைந்திருப்பதாக கூறப்படுகிறது. தாக்குதல் நடத்திய பிறகு போலீஸ் ஸ்டேஷனுக்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த லாரியில் ஏறி பயங்கரவாதிகள் தப்பிச் சென்றுள்ளனர்

ஹிராநகர் போலீஸ் ஸ்டேஷனிற்குள் தாக்குதல் நடத்தப்பட்ட சிறிது நேரத்திலேயே சம்பா மாவட்டத்தில் உள்ள இந்திய ராணுவ முகாம் மீதும் பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்தி உள்ளனர். இதில் ராணுவ வீரர் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார். 

சர்வதேச எல்லைப் பகுதிக்கு அருகே உள்ள போலீஸ் ஸ்டேஷனை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பயங்கரவாதிகள், ராணுவ உடையில் வந்து தாக்குதல் நடத்தி உள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இவர்கள் பாகிஸ்தானை சேர்ந்தவர்களாக இருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது.
இரட்டை தாக்குதல் தொடர்பாக இன்று மத்திய உள்துறை அமைச்சகம், உள்துறை செயலர் ஆகியோர் அடங்கிய உயரதிகாரிகள் கூட்டம் நடந்தது. இது தொடர்பாக விரிவான ஆலோசனை நடத்தினர்.

இத்தாக்குதலையடுத்து, பாதுகாப்புபடையினர்  தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் 3 போராளிகள்  சுட்டுக்கொல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும் ராணுவஹெலிகாப்டர்கள் மூலம் தேடுதல் வேட்டையும், கடும் துப்பாக்கிச்சண்டையும் நடக்கிறது.
இம்மாதம் 29ம் தேதி அமெரிக்காவில் பிரதமர் மன்மோகன் சிங்கை, பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் சந்திக்க இருக்கும் நிலையில் இந்த தாக்குதல் நடந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisements
This entry was posted in World. Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s