ஹைத்தியில் இலங்கை ராணுவ சிப்பாய் மீது பாலியல் புகார்

130918162903_haiti_lankan_soldiers_304x171_afpgettyimages_nocreditஹைத்தியில் பணிபுரிய சென்றுள்ள இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த சிப்பாய் ஒருவர் உள்ளூர் பெண் ஒருவரை பாலியில் வல்லுறவுக்குட்படுத்தியதாக புகார் வந்துள்ளதை ஐ நா உறுதிப்பட்டுத்தியுள்ளது.

கரிபியன் தீவுக் கூட்டத்தில் உள்ள ஹைத்தியில் பணியாற்ற சென்றிருந்த இலங்கை படைச்சிப்பாய், சனிக்கிழமையன்று சாலைக் கடவையில் பணியாற்றிக் கொண்டிருந்தபோது, அந்த பகுதி வழியாக காரில் வந்திருந்த பெண்ணை நிறுத்தி சாலைக்கு அருகேயுள்ள ஆளில்லா கட்டிடத்துக்கு கொண்டு சென்று அவரை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாக புகார் எழுந்துள்ளது.

பாதிக்கப்பட்ட பெண் தற்போது மருத்து மனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் காவல்துறையினருக்கு வாக்குமூலம் அளித்துள்ளார். இந்த விடயம் தொடர்பாக ஹைத்தியின் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்நிலையில் இந்த விடயம் குறித்து ஹைத்தியில் இருக்கும் ஐ நா ஸ்திரத்தன்மை படையின் பேச்சாளர் சோபி புட்டோடெல்கோம் அவர்களிடம் பிபிசி சார்பில் கேட்கப்பட்டது.

பிபிசியின் கேள்விக்கு பதிலளித்த ஐநாவின் பேச்சாளர், ஐநாவில் பணியாற்றும் ஒரு இராணுவ சிப்பாய் மீது கூறப்படும் புகார் குறித்து தாங்கள் அறிந்திருப்பதாக தெரிவித்தார். “பாலியல் வன்முறைகளை ஐ நா சகித்துக் கொள்ளாது என்பதை உறுதிபட தெரிவித்துக் கொள்கிறோம். சம்மந்தப்பட்ட நபர் மீது உரிய விதிகளின்படி நடவடிக்கை எடுக்கப்படும். இது குறித்த ஆரம்பகட்ட விசாரணை நடத்தி வருகிறோம். இது போன்ற குற்றச்சாட்டுக்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து விசாரிப்போம், இப்போதைய சூழலில் அந்த சிப்பாயின் பெயரை நாம் வெளியிட முடியாது”, என்றார் அவர்.

மேலும் உள்ளூர் ஊடகங்கள் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரை வெளியிட்டிருப்பது சர்வதேச ரீதியாக ஏற்கப்பட்ட நடைமுறைகளுக்கு பொறுந்தாதது என்பதால் தாம் அவரது பெயரை வெளியிடவில்லை என்றும் இது குறித்த விசாரணை எப்போது முடியும் என்ற கலாக்கெடுவை கொடுக்க முடியாது என்றும் பிபிசியிடம் தெரிவித்தார் ஹைத்தியில் இருக்கும் ஐ நா ஸ்திரத்தன்மை படையின் பேச்சாளர் சோபி புட்டோடெல்கோம்.

இதேவேளை, இந்த பாலியல் வல்லுறவு சம்பவம் தொடர்பில் இணையத்தில் வெளியான செய்திகள் தம் கவனத்திற்கு வந்திருந்தாலும் ஐ நாவிடமிருந்து தமக்கு இது குறித்து அதிகாரபூர்வமாக ஏதும் தெரிவிக்கப்படவில்லை என்று இலங்கை இராணுவப் பேச்சாளர் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.

ஹைத்தியில் இருக்கும் இலங்கைத் துருப்புக்களின் கமாண்டர், இது குறித்து இராணுவத் தலைமையகத்துக்குத் தெரியப்படுத்தியுள்ளதாகவும், குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியுள்ள படைச் சிப்பாய் தான் குற்றம் செய்யவில்லை என்று கூறியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.130918162903_haiti_lankan_soldiers_304x171_afpgettyimages_nocredit

This entry was posted in World. Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s