காஷ்மீரில் மோதல் பேர் பலி

kas கஷ்மீர் பள்ளத்தாக்கு ஒரு இடைவேளைக்கு பிறகு மீண்டும் கலவர பூமியாக மாறுகிறது.

தெற்கு மாவட்டமான சோபியானில் சி.ஆர்.பி.எஃப். முகாம் மீது மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டை தொடர்ந்து நடந்த சம்பவங்களில் நான்கு பேர் மரணித்துள்ளனர்.

இது மக்களிடையே கொந்தளிப்பை உருவாக்கியுள்ளது. நேற்று மதியம் ஒரு மணியளவில் சி.ஆர்.பி.எஃப். முகாம் மீது தாக்குதல் நடத்தியவர்கள் என்று கூறி பாதுகாப்பு படையினர் 4 பேரை சுட்டுக் கொன்றனர். இவர்களில் இரண்டு பேர் சாதாரண மக்கள் என்று போலீஸ் கூறுகிறது.

ஆனால், அவ்வூர்வாசிகளோ எவ்வித காரணமுமின்றி பாதுகாப்பு படையினர் அப்பாவிகளை சுட்டுக் கொலை செய்ததாக குற்றம் சாட்டுகின்றனர். ராணுவத்தின் அநியாய நடவடிக்கையை கண்டித்து வீதிகளில் இறங்கி போராடிய மக்கள் பாதுகாப்பு படையினருடன் மோதலில் ஈடுபட்டனர்.

மக்கள் கூட்டத்தை கலைக்க பாதுகாப்பு படையினர் கண்ணீர் புகை மற்றும் தடியடிn நடத்தினர். பைக்கில் சென்றவர்கள் மீது பாதுகாப்பு படையினர் துப்பாக்கியால் சுட்டதாக ஹிந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகை கூறுகிறது.

பைக்கில் தேர்வு எழுத சென்று கொண்டிருந்த தங்களை தடுத்து நிறுத்தி தன் பின்னால் இருந்த நண்பரை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றதாக மாணவரான ஆதில் ரஹ்மான் கஷ்மீரி பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

பிரபல இசைக்கலைஞர் சுபின் மேத்தாவின் கச்சேரி நடப்பதால் கஷ்மீர் பள்ளத்தாக்கு முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட உயர் போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.

ஐந்து போலீசார் மற்றும் இரண்டு ராணுவத்தினர் உள்பட 10 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. ராணுவத்தின் அநியாய நடவடிக்கையை கண்டித்து ஹுர்ரியத் மாநாட்டுக் கட்சியும், ஜம்மு-கஷ்மீர் விடுதலை முன்னணியும் இன்று கஷ்மீரில் முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளன.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஜே.கே.எல்.எஃபின் தலைவர் யாஸீன் மாலிக்கை போலீஸ் கைது செய்துள்ளது.

Advertisements
This entry was posted in World. Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s