சிரியா மீதான இராணுவ நடவடிக்கைக்கு அமெரிக்க நாடாளுமன்றமான காங்கிரஸை இணங்க வைக்கும் முயற்சிகளில் அதிபர் ஒபாமா

images (24)சிரியா மீதான இராணுவ நடவடிக்கைக்கு அமெரிக்க நாடாளுமன்றமான காங்கிரஸை இணங்க வைக்கும் முயற்சிகளில் அதிபர் ஒபாமா நிர்வாகம் மும்முரமாக ஈடுபட்டுள்ளது.

காங்கிரஸில் அடுத்தவாரம் இதற்கான வாக்கெடுப்பு நடக்கவுள்ளது.

கோடைகால விடுமுறையை முடித்துக்கொண்டு திரும்பியுள்ள பெரும்பாலான காங்கிரஸ் உறுப்பினர்கள், புலனாய்வு விளக்கக் கூட்டமொன்றில் கலந்துகொள்ளவுள்ளனர்.

சிரியாவில் சுமார் 1400க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்படக் காரணமான ஸரின் நச்சுவாயுத் தாக்குதலை அரசாங்கம் நடத்தியுள்ளதாக ஒபாமா நிர்வாகம் முன்வைக்கும் குற்றச்சாட்டை நிறுவுவதற்காக இந்தப் புலனய்வு விளக்கக் கூட்டம் நடக்கவுள்ளது.

இராணுவத் தலையீடு சாத்தியமாகுமா என்று சந்தேகம் வெளியிட்டுள்ள தரப்பினருக்கும் ஒபாமா தமது திட்டத்தை ஆதரிக்குமாறு தொடர்ச்சியாக அழைப்புகளை விடுத்துள்ளார்.

ஒபாமாவின் இராணுவ நடவடிக்கைத் திட்டத்துக்கு காங்கிரஸின் அனுமதி கிடைப்பது என்பது ‘மிகப்பெரிய சூதாட்டம்’ போன்றது என்று கூறியுள்ள பிபிசியின் வட அமெரிக்க பணியக செய்தியாசிரியர் கூறுகிறார்.bbc

This entry was posted in Uncategorized. Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s