பைத்துல் முகத்தஸ் மஸ்ஜிதின் மேற்குச் சுவருக்கு அருகிலுள்ள பகுதியில் பெரும் மண் சரிவு

masjid-al-aqsa-267x170முஸ்லிம்களின் முதல் கிப்லாவான பைத்துல் முகத்தஸ் மஸ்ஜிதின் மேற்குச் சுவருக்கு அருகிலுள்ள பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை பெரும் மண் சரிவு ஏற்பட்டுள்ளது.

பைத்துல் முகத்தஸ் மஸ்ஜிதின் மேற்குச் சுவரில் அமைந்துள்ள பாபுல் சில்சிலா என்ற வாயிலுக்கருகில் இந்த மண் சரிவு ஏற்பட்டுள்ளது என்று நேரில் பார்த்த ஒருவர் கூறினார்.

கடந்த 5 வருடங்களில் மேற்குச் சுவருக்கருகில் இது இரண்டாவது மண் சரிவாகும் என்று நேரில் பார்த்த குமா உசைல் என்பவர் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியதாவது: “இந்த மண் சரிவினால் ஆழமான ஒரு பெரிய ஓட்டை அந்தப் பகுதியில் ஏற்பட்டுள்ளது. பைத்துல் முகத்தஸ் மஸ்ஜிதுக்கு இது ஆபத்தாகும். குறிப்பாக, பெண்களுக்கும், சிறுவர்களுக்கும் இது பெரும் ஆபத்தாக முடியும்.”

இதுவரை இதற்கு இஸ்ரேலிய அரசு எந்தவிதமான பாதுகாப்பு நடவடிக்கைகளும் எடுக்கவில்லை. இந்தச் சம்பவம் குறித்து அரசுத் தரப்பிலிருந்து எந்த அறிக்கையும் வரவில்லை.

“பைத்துல் முகத்தஸுக்கருகில் புதிய குடியிருப்புகள் கட்டப்படுவதனாலும், ஒரு டஜனுக்கும் மேற்பட்ட சுரங்கப் பாதைகள் தோண்டுவதன் மூலமும் அல் அக்ஸா மஸ்ஜிதைத் தகர்ப்பதற்குண்டான வழிவகைகளை இஸ்ரேலிய அரசு உண்டாக்குகிறது” என்று அல் அக்ஸா நிறுவனம் மற்றும் கலாச்சார பாரம்பரிய நிறுவனம் (Al Aqsa Foundation and Cultural Heritage Organization) குற்றம் சாட்டியுள்ளது.

This entry was posted in Uncategorized. Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s