அச்சுறுத்தல்களுகு்கு அடிபணிய மாட்டேன்: அனந்தி எழிலன்

anandhi_elilan_001அரசாங்கத்தின் மிரட்டல்களுக்கும் அச்சுறுத்தல்களுக்கும் பயப்படமாட்டேன் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சபை வேட்பாளர் அனந்தி எழிலன் தெரிவித்துள்ளார்.

நேற்று அனந்தி எழிலனுக்கு எதிராக யாழில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டமொன்று தொடர்பில் கருத்து வெளியிடும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஆளும் தரப்பினரும் அதன் பங்காளிகளும் இணைந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குச் சேறு பூசும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியே நேற்று யாழ். நகரில் இடம்பெற்ற கண்டன ஊர்வலம்.

இலங்கையின் ஜனநாயக அரசியலில் மக்கள் உணர்வுகளை காலில் மிதித்து அவர்களது கருத்துவெளிப்பாட்டு சுதந்திரத்திற்கு தடைப்போட்டு சட்டத்தை கையிலெடுப்பவர்கள் தமக்குதாமே எந்தவித அனுமதியும் பெறாது சுலபமாக கண்டன ஊர்வலங்களை நடத்த முடிகின்றது.

இக்கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு அழைத்துவரப்பட்டவர்கள் பலாத்காரமாகவே அழைத்து வரப்பட்டுள்ளனர். ஏனெனில் அவர்களின் கைகளினில் திணிக்கப்பட்ட சுலோக அட்டைகளும் தெளிவாக்கி சுட்டிக் காட்டுகின்றது.

எந்தவிதமான அச்சுறுத்தல்களுக்கும் நான் அடிபணியப் போவதில்லை. மக்களுக்காக குரல்கொடுக்க பின்வாங்கப் போவதில்லை என்பதையும் இங்கு குறிப்பிடுகிறேன்.

முள்ளிவாய்க்காலில் இருந்து கணவனையும் பிரிந்து அநாதரவாக எனது மூன்று பெண் குழந்தைகளுடன் வந்த என்னை என் தேசமும் உறவுகளுமே அடைக்கலம் தந்து மீட்டெடுத்தனர்.

அவ்வகையில் நான் எனது தேசத்திற்கும் மக்களிற்கும் மரணிக்கும்வரை விசுவாசமாக இருக்கவேண்டியவளாக இருக்கின்றேன். காணாமல் போயுள்ள எனது கணவர் முதல் அனைத்து காணாமல் போனவர்களிற்காகவும் நான் குரல் எழுப்பியே வருகின்றேன்.

தமிழ் அரசியல் கைதிகளது விடுதலைக்காக,முன்னாள் போராளிகளது நிம்மதியான வாழ்விற்காக, பெண் தலைமை தாங்கும் குடும்பங்களின் நலனிற்காக நான் போராடுவேன்.

பாதுகாப்பான வாழ்க்கையை நான் எப்போதோ தொலைத்துவிட்டேன். எமது மக்களை போல என்னிடமும் இழப்பதற்கு ஏதுமில்லை எனத் தெரிவித்தார்.

Advertisements
This entry was posted in Uncategorized. Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s