செய்யப்படாத உடன்படிக்கையில் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் நம்பிக்கை நம்பமுடியாத நிலையில் மக்கள்

download (27)செய்யப்படாத உடன்படிக்கையில் நல்லாட்சிக்கான மக்கள்இயக்கம் நம்பிக்கை நம்பமுடியாத நிலையில் மக்கள்இலங்கை முஸ்லிம்களின் அரசியல் அபிலாசைகளை நிறை வேற்றத்தவரி விட்டதாக முஸ்லிம்கள் மத்தியில் முஸ்லிம் காங்கிரஸ் தொடர்பாக மக்கள் மத்தியில் எழுந்துள்ளவிமர்சனங்களை தொடர்ந்து மக்கள் அதற்கீடான மாற்றுத்தீர் வொன்றை தேடும் நிலையில் தேசிய அரசியலில் கூட்டு முன்னணியாக தோற்றம் பெற்றுள்ளது நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் இதன் வரலாறும் காத்தான்குடியிலிருந்தே ஆரம்பமாகியுள்ளது.

காத்தான்குடியில் இரண்டு நகரசபைதேர்தல்களை எதிர்கொண்டுள்ள நிலையில் இறுதியாக இடம்பெற்ற நகரசபைத்தேர்தலில்இரண்டு ஆசனங்களை வென்று நகரசபையில் எதிர்கட்சியாக உள்ளனர் கடந்த மாகாணசபை தேர்தலில் பலமாவட்டங்களில் போட்டி இட்டிருந்தபோதும் அம்மாவட்டடங்களில் உள்ள ஆளும் கட்சி அரசியல் வாதிகளின் காடைத்தனத்தினால் சுதந்திரமாக தங்களது கருத்துக்களை முன்வைக்க முடியாமல் தேர்தல் பிரச்சாரங்களிலிருந்து வெளியேறினர்.

கடந்தமாதம் வடக்கு மாகாண சபை தேர்தல் அறிவிப்பினை தொடர்ந்து நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் இஸ்லாமிய பாரம்பரியத்தில் வளர்ந்துள்ள சில இயக்கங்களுடன் கூட்டிணைந்து வடக்கு மாகாணசபையில் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இணைந்து மன்னார் மாவட்டத்தில் ஒரு வேட்பாளரை களமிறக்கியுள்ளது.

இது தொடர்பாக இணையத்தளங்கள் மற்றும் தொலைகாட்சிகள் மூலமாக நல்லாட்சிக்கான கூட்டுமுன்னநியினரின் தொலைகாட்சி உரையாடல்கள் மற்றும் அறிக்கைகள் வாயிலாக அறிந்து கொள்ளக்கிடைத்தது.

தமிழ் தேசிய கூட்டமைப்புடனான தேர்தல் தொடர்பான ஒப்பந்தம் ஒன்றை மிக விரைவில் செய்ய உள்ளதாகவும் அது பகிரங்கமாக மக்களுக்கு அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது ஆனால் இதுவரை அவ்வாறான எந்த ஒப்பந்தங்களும் இடம் பெற்றதாகவோ அல்லது அதற்கான ஏற்பாடுகள் இடம் பெறுவதாகவோ தெரியவில்லை

ஆனால் மீண்டும் முஸ்லிம் சமூகத்தில் மெல்ல துளிர்விட ஆரம்பித்துள்ள அரசியல் தொடர்பான நம்பிக்கை வீணான ஒரு கற்பனை தானோ என எண்ணத்தோன்றுகிறது.

கடந்த காலங்களில் தமிழ் தேசிய கூட்டமைப்பு விடுதலைப்புலிகளின் பிரதிநிதிகலவே செற்பட்டு வந்தனர் புலிகளின் தமிழ் ஈழ கோட்பாடுகளையே அங்கீகரித்தும் பிரச்சாரங்களை மேற்கொண்டனர் இலங்கை தீவில் இடம்பெற்ற யுத்தத்தின் போது முஸ்லிம் சமூகம் வடக்கு கிழக்கிலிருந்து முஸ்லிகளை முற்றாக துடைத்தெறிய முனைந்த விடுதலைப்புலிகள் அதற்கான பல்வேறு உத்திகளை கையாண்டனர் பள்ளிவாயல் படுகொலை விவசாயநிலங்கள் பறிக்கப்பட்டன போக்குவரத்து பாதைகள் அனைத்தும் தடைசெய்யப்பட்டது பூர்வீக மண்ணிலிருந்து உடுத்திய ஆடைகளுடன் அகதிகளாக விரட்டி அடிக்கப்பட்டனர் அப்போது கற்பழிப்பு கொலையென பல்வேறு அநியாயங்கள் வரலாற்றுப்பக்கங்களில் தேங்கிக்கிடக்கிறது ஒரு சமூகம் வாழமுடியாத அளவு அத்தனைவழிகளையும்களையும் பயன்படுத்தி வெளியேற்றுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டனர்.
இதற்கான காரணம் தமிழர்களை கொண்ட தனியான தமிழ் ஈழக்கனவே இக்கால கட்டத்தில் அரசுடன் இடம்பெற்ற பல்வேறு பேச்சுவார்த்தைகளில் முஸ்லிம்கள் தொடர்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் கொள்கைகள் முஸ்லிம்கள் தொடர்பில் மிக மோசமான பாசிச வெறியுடனேயே காணப்பட்டது.

முஸ்லிம்களை ஒரு சமூகமாகவேனும் ஏற்றுக்கொள்ளத்தயங்கினர் அது மாத்திரமன்றி பேச்சு வார்த்தையின்போது முஸ்லிம்களுக்கு இலங்கையில் எவ்வித பிரச்சினையும் கிடையாது அவர்கள் தமிழ் பேசும் முஸ்லிம்கள் அவர்கள் தனியான சமூகமல்ல ஒரு குழுமம் என பல்வேறு பேச்சு வார்த்தைகளில் கூறிவந்தனர் அப்போது புலிகள் பலமான இராணுவ கட்டமைப்பை கொண்டிருந்தனர்.

இலங்கையில் இடம்பெற்ற அனைத்து பேச்சு வார்த்தைகளும் இருதரப்பினராலும் இதய சுத்தியோடு இடம்பெறவில்லை குழிபறிக்கும் பல்வேறு மறைமுக திட்டங்களுடன்தான் இடம்பெற்றது அப்பேச்சு வார்த்தைகளின் போது தமிழ் தேசிய கூட்டமைப்பினர் பங்கு கொண்டிருந்தனர் .

அகாலப்பிரிவில்  இடம்பெற்ற முஸ்லிம் காங்கிரெஸ் +புலிகளுக்கிடையிலான ஒப்பந்தம்  நீண்ட நாட்கள் நீடிக்க வில்லை தாமாகவே விடுதலைப்புலிகள் ஒப்பந்தத்தை ரத்துச் செய்தனர் இவ்வாறு பல்வேறு குழிபறிப்புக்கள் ஏமாற்று வித்தைகளை கற்றுக்கொண்டுள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆயுத போராட்டத்தில் தோள்விகண்டு பலமிழந்துள்ள நிலையில் முஸ்லிம் சமூகத்துடன் இணைந்து செல்ல வேண்டிய நிற்பந்தத்துடன்தான் கூட்டுச் சேரவும் முஸ்லிம்களுக்காக குரல் கொடுக்கவும் பங்கு போடவும் முன்வந்துள்ளனர் .

இப்போது அவர்கள் முஸ்லிம்களை அரவனைத்துகொள்ளாத நிலையில் தமது அரசியல் காய் நகர்தல்களை சர்வதேச ரீதியாக முன் கொண்டு செல்வது கூடிய பயனைத்தராது என்பதை அவர்கள் தெரிந்து கொள்ளாமலும் இல்லை

இக்கூட்டானது தமிழ் முஸ்லிம் உறவைக்கருத்தில் கொண்டாலும் இது ஒரு தமிழ் தேசிய கூட்டமைப்பின் அரசியல் இலாபங்களை கொண்டதாகவே பார்க்க வேண்டும் வடகிழக்கு பிரதேசங்களில் மீள் குடிஏற்றம் தொடர்பாக பல்வேறு சிக்கள்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர் முஸ்லிகளின் நிலங்களில் குடியேருவதற்கே தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளு மன்ற உறுப்பினர்களே தமிழ் மக்களை திரட்டி முஸ்லிம்களுக்கு எதிரான பல்வேறு சுலோகங்களுடன் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்  இவ்வாறன சூழ்நிலைகளில் எவ்வாறு இருசமூகங்களுக்குகிடையிலான உறவை மேன்படுத்த முடியும் தமிழ் தேசிய கூட்டமைப்பு உரியமுரையிலான விட்டுக்கொடுப்புகளுடன் உறவை மென்படுத்தும் நடவடிக்கைகளை முன்னெடுத்த பின்னரே இக்கூட்டு இடம் பெற்று இருக்க வேண்டும்

முஸ்லிம் தமிழ் மக்களிடையிலான உறவு காலத்தின் தேவை தான் என்றாலும் நாம்கண்டு கொண்ட கடந்தகால
அனுபவங்களை கொண்டே நிகழ் காலத்தை திட்ட மிடவேண்டும் இறை நிரகரிப்பலர்களிடம் செய்யப்படும் ஒப்பந்தங்கள் தொடர்பாக இஸ்லாம் காட்டித்தந்த முன்மாதிரியைகொண்டே ஒப்பந்தங்கள் செய்ய முன்வர வேண்டும் அவ்வாறு செய்யப்படும் ஒப்பந்தங்கள் முன்னராக இலங்கையில் உள்ள புத்தி ஜீவிகளின் கருத்துப்பரிமாறலின் பின்னரே மக்கள் முன்னிலையில் ஒப்பந்தங்கள் செய்யப்படவேண்டும் முஸ்லிம் சமூகத்தின் அரசியல் பலம் யாருடைய குடும்பச் சொத்துமல்ல என் பதை தெளிவாக விளங்கிக் கொள்ளவதோடு .இதுவரை தமிழர் தேசிய கூட்டமைப்புடன் பேசிக்கொண்டது தொடர்பாக முழுமையான அறிக்கைகளை மக்கள் முன் சமர்பித்தாக வேண்டும் மக்களை ஏமாற்றும் இருட்டுக்குள் மேற்கொள்ளும் குருட்டு ஒப்பந்தங்களை மேற் கொண்டால் முஸ்லிம் சமூகம் அதனை  நிராகரிக்கும் புத்தி ஜீவிகளே சமூகத்தின் காவலர்களாக கூறிக்கொள்ளும் உலமாக்களே முஸ்லிம் சமூகத்தை நேரான பாதையில் வழி  நட்டத்துவதற்கு அச்சமின்றி எப்போது முன்வருவீர்கள்

Advertisements
This entry was posted in Uncategorized. Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s