ஊழல் மோசடிகளில் ஈடுபட்ட நகரசபையில் காத்தான்குடிக்கு முதலிடம் ஏறாவூர் இரண்டாம் இடம்

images (15)காத்தான்குடி நகரசபையை கடந்த நகரசபைத் தேர்தலின் போது கிஸ்புல்லாஹ் தலைமையிலான அகில இலங்கை முஸ்லிம்காங்கிரஸ் ஆளும் தரப்பு கைப்பற்றியது.

கல்விமான்கள் உலமாக்கள் நிறைந்த காத்தான்குடி நகரத்தின் தலை விதி கல்விஅறிவற்றஅரசியல் வாதிகளின் எடுபிடிகளின் கைகளுக்குமாறியது .

ஊழலில் இலங்கையில் புகழ்பெற்ற அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் தலைமையில் இயங்க ஆரம்பித்தது இதுவரை இடம்பெற்ற பல்வேறு திட்டங்கள் தோல்விகண்டுள்ளன நகரசபைக்கு தெரிவுசெய்யப்பட்ட உறுப்பினர்கள் தற்பொழுது பலகோடிகளுக்கு சொந்தக்காரர்களாக மாறியுள்ளனர்.

காத்தான்குடியில் பல கோடி ரூபாய் பெறுமதியான சொத்துக்கள் சொகுசுவாழ்கை என அனுபவிக்கின்றனர் இவர்களின் அபிவிருத்தி வேலைகளால் பாதிக்கப்பட்ட மக்கள் ஊரின் அரைவாசிக்கு மேல் மழைகாலங்களில் வீட்டை விட்டு வெளியேற வேண்டிய துர்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இது குறித்து காத்தான்குடி நகரசபையில் எதிர்கட்சியாக உள்ள நல்லாட்சிக்கான மக்கள் இயக்க உறுப்பினர்கள் இவர்கள் தொடர்பான திருட்டு வேலைகளில் ஈடுபட்டதற்கான ஆதாரங்களை முன்வைத்து வருகின்ற போதிலும் அவற்றுக்கு எதிராக அச்சுறுத்தல்கள் மூலம் முறியடிக்கப்பட்டுவருகிறது.

சாதாரண கொடுக்கல்வாங்கல்களுக்கு தீர்வுகளை கண்டு வரும் காத்தான்குடி சம்மேளனம் கோடிக்கணக்கில் நகரசபையில் திருடப்பட்டுள்ளதாக ஆதாரபூர்வமாக கூறி வருகின்ற போதிலும் தவ்கீத், தப்லீக்,ஏனைய சமூக இயக்கங்கள் ஜமியத்துல் உலமா போன்றவை இது ஒரு நல்லாட்சிக்கான மக்களியக்கத்தின் அரசியல் பிரச்சினையாகவும் காத்தான்குடியின் ஏகபோக அரசியல் உரிமைகளை எழுதி வாங்கியுள்ள அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் ஆசியை இழந்து விடுவோம் என்ற பயத்தினாலும் பகிரங்கமாக இடம்பெற்று வரும் திருட்டை விசாரிக்கவோ குறைந்த பட்சம் கொத்துபா மேடைகளில்லாவது ஹறாமென கூறுவதற்கு அஞ்சி வருகின்றனர் இன்னும் ஒரு ஆச்சரியமான விடயம் சமூக மாற்றத்திற்காக பாடுபடும் இலஞ்சர்களும் நமது சொத்தையா திருடுகிறார்கள் அரசாங்கத்தின் சொத்தைத்தானே என்று அசட்டையாக கூறிவிட்டு விட்டுவிடுகிறார்கள் .

இன்னும் சிலர் திருடினாலும் பரவா இல்லை இவர்கலை ப்போல ஆட்கள் நகரசபையில் இருந்தால் தான் எதையாவது கொடுத்தாலும் நமது வேலையை இலகுவாக முடித்துக்கொள்ளலாம் என்று விட்டு விடுகிறார்கள்.

எப்போது நாம் அடுத்த சந்ததியினருக்கு சுத்தமான காற்றையும் சுபீட்சமான நேர்மையான வாழ்க்கையையும் விட்டுச் செல்லப்போகிறோம்

Advertisements
This entry was posted in Sri Lanka, Uncategorized. Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s